- Sunday
- June 14th, 2026
புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். சுமந்திரனுடைய கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ அவர்கள் இவ்விடயத்தில் கூட்டமைப்பினர்...
தமிழீழ தேசிய இலட்சினைகளுடனான புடைவைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் குறித்த புடைவை வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய மலரான கார்த்திகை பூவும், இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது உண்மையாகவே நாம் எதிர்பார்க்கக்கூடிய எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என அமைச்சர் மனோகணேசன் பிரித்தானியாவில் தெரிவித்துள்ளார். நான் இவ்வாறு உண்மைகளை சொல்லுவது சம்பந்தன் சுமந்திரனுக்கு பிடிப்பதில்லை சந்திரனை தருகிறோம்,இந்திரனை பிடித்து தருகிறோம் என த.தே.கூட்டமைப்பு பம்மாத்து காட்டிவருகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள மனோ கணேசன் உண்மையாக...
வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும்...
முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும்...
கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் நேற்று வெள்ளிக்கிழமை (05) இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (வயது 11) என்ற இந்த மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளைக்...
தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கம் சரியான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களும் கடுமையான நடவடிக்கைகயை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார். இதேவேளை நேற்று வைத்தியர்கள்...
இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரி இரணைமாதா நகரில் கடற்கரை ஓரமாக தகரக் கொட்டகைக்குள்ளிருந்து போராட்டம் நடாத்திவருகின்றனர். வீதியோரம் சமைத்து உண்டவாறு இரவுபகலாக தங்கியிருந்து போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆரம்பித்த நாள் முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 5வது...
வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறியாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார் கமல். விஸ்வரூபம் வெளியான உடனே, விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விஸ்வரூபம் 2 படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது....
டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், அதையடுத்து ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கப்போகிறார் என்றதும், சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டைரக்டர் ரஞ்சித் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை விடவில்லை. தங்கள் கூட்டணி வெற்றிகரமாக இருப்பதால் கபாலியிலும் அவரையே இசையமைக்க வைக்க விரும்பினார்....
இலங்கை உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தொடர்பாடலுக்கான செய்மதி நேற்று(05) பிற்பகல் இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். நேற்ற (05) பிற்பகல் அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தொடர்பு...
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வௌிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
ஊவா மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேவேளை, ஊவா மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். ஊவா மாகாணத்தில் நிலவும்...
தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் வேலைநிறுத்தம் இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாகந்துர, ரன்சேகொட விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில், நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை...
அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் மந்த கதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம், தற்போது அவ்விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து காணப்படுகிறது என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 68 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 8 மணியளவில் வடக்கு மாகாண சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த போவதாகவும்...
வடமாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு கீழ் உள்ள 6 வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சு ஒப்புதல் அழித்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 110 வைத்தியசாலைகளில் 6 வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்துவதற்காக மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு கொழும்பு சுகாதார...
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராம்பியடி பிரதேசத்தில் நேற்ற(05) அதிகாலை 3 மணியளவில் இடம்பெறற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கீழ் இயங்கும் தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்கள சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து கொழும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச்...
இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து...
Loading posts...
All posts loaded
No more posts
