Ad Widget

நல்லாட்சி தீா்வை வழங்கும் என்ற நம்பிகையை தமிழ் மக்கள் இழக்கின்றனா்: எஸ். ஸ்ரீதரன்

நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில், நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தென்னிலங்கை தலைவர்களுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் கோரிக்கைகள் விளங்கவில்லை. காணமல்போனவர்கள் தமது உறவை கேட்டு போராடும் அதேநேரம் கேப்பாபுலவிலும் கிளிநொச்சியிலும், இரணைதீவிலும் காணிகளை விடுவிக்க கோரி மக்கள போராடங்களை முன்னெடுக்கின்றனர்.

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனமாகும். அதனை மறந்து அந்த மக்களின் ஜனநாயக போராட்டங்களை பாராமுகமாக இருப்பதானது இந்த நாட்டின் இறைமையையே பாதிக்கும்.

அன்றைய காலத்திலும் தந்தை செல்வநாயகம், அமிர்த்தலிங்கம் ஆகியோரின் அறவழிப்போராட்டங்களையும் தென்னிலங்கைத் தலைவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. மதிக்கவில்லை. அவர்களின் போராட்டங்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். இரத்தம் சிந்தயவாறு அப்போதைய எதிா்க் கட்சித் தலைவரான அமிர்த்தலிங்கம் இந்த சபையில் உரையாற்றியபோது எள்ளி நகையாடினார்கள்.

அதன் விளைவு தான் அறவழிப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது. தனிநாட்டுக்கோரிக்கை எழுந்தது. இன்று இழப்புக்கள் அவலங்களுக்கு பின்னரான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆனாலும் புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை இழக்கப்படுகின்றது. ஆகவே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றி பேசுகின்றீர்கள். இதுவெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும் என்றார்.

Related Posts