- Saturday
- June 13th, 2026
காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தியை வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த...
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் `ரங்கா' படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல்...
நாகவிகாரை ஓய்வு விடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலப்பதனைக் கண்ட வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அதிர்ச்சி அடைந்ததோடு சட்டத்தை அமுல் செய்ய வேண்டிய மாநகரசபையினரையும் கடிந்துகொண்டார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் மற்றும் குளத்திலிருந்து கடலிற்குச் செல்லும் வடிகால் என்பன ஆளுநரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் , படையினர் , மாநகர சபையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன்...
வடக்கு மாகாணத்திலே வைத்தியர்கள்,பொறியியலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள் தரத்தினில் மட்டும் 641 வெற்றிடங்கள் காணப்படுகின்றது எனவே இவ்வாறு காணப்படும் வெற்றிடங்களிற்கு உரிய ஆளணி நிரப்பப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் 9 மாகாண முதலமைச்சர்கள் மாநாடு நேற்றைய தினம் வட மத்திய மாகாணத்தின் கபரனப் பகுதியில்...
இலங்கை வாழும் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஒவ்வொரு 100 பேருக்கும் 12 தரைவழித் தொலைபேசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கைபேசிகளையும் சேர்த்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள் இருக்கின்றன. அத்துடன் சிறிலங்காவின் சனத்தொகையில் 23.2 வீதமானோர் இணையத்தளத்தைப்...
உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்....
கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எந்த வித சட்ட திட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1 ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த அதிபரை 1...
மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்) தேசியமயப்படுத்துமாறு கோரி, காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் உப செயலாளர் நளிந்த ஹேரத், காலவரையற்ற இந்த வேலைநிறுத்தம், அனேகமாக இம்மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இறுதி...
யாழ். திருநெல்வேலி சந்தியில் ரயர் ஒட்டும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதோடு பெறுமதி வாய்ந்த பொருட்களும் எரிந்துள்ளன. நேற்றிரவு கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டுச் சென்ற பின்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சென்று பார்த்தபோது கடையின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது....
யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் நினைவுதினம், யாழ். பலாலி படைத் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, பலாலி படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அத்தோடு, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா...
வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக...
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இச் சந்திப்பின் போது தமிழ்...
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுக்களைப் பெற்ற முதலாவது பந்து வீச்சாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாளிங்க சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தில்லி டெயா டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாளிங்க வீழ்த்திய 02 விக்கெட்டுக்களுடன் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. லசித் மாளிங்க இதுவரையில் 105 ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துகொண்டு...
நாட்டிலுள்ள புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக் குறையாத தண்டனை பெறும் குற்றச் செயல் என தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படும் ஒருவரின் உடைமைகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் எனவும் அச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும்...
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியைச் சேர்ந்த ஆறு வயதுப் பிள்ளையின் தாயாரும் முன்னாள் போராளியுமான யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் போராளியாக இருந்து உயிரிழந்துள்ளமையினால் விரக்தியடைந்த நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார். முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட அடுத்த நிலையில் உள்ளவர் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து துணைவேந்தராக வந்திருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைவேந்தர்கள் இவ்வாறு அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து பதவிக்கு வந்தால் மாணவர்கள் மதிப்பார்களா?...
"அழிவை நோக்கி செல்லும் ஆரிய குளத்தை பாதுகாப்போம்" எனும் தொனிப் பொருளில் ஆரிய குளத்தை புனரமைக்கும் செயற்றிட்டம் நேற்றய தினம் வடமாகாண ஆளுநர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த செயற்றிட்டம் ஆரிய குளத்திலிருந்து காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் என்.வேதநாயகன்,...
சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்ற பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவத்தில் உணவகத்தின்...
ஃபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல்,...
தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமிற்குள் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், இலங்கை அகதிகள் தாக்கியதில் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள முகாமில் இலங்கை அகதிகள் 1900 உள்ளனர். இம்முகாமிற்குள் நேற்று முன்தினம் தேவாலய திருவிழா நடந்தது. அன்றிரவு தேவாலயம் முன்பு இன்னிசை...
Loading posts...
All posts loaded
No more posts
