வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 68 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 8 மணியளவில் வடக்கு மாகாண சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த போவதாகவும் மேலும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல கோரிக்கைகளை முன்வைக்கபோவதாகவும் தாம் இவ்வளவு நாட்கள் போராடியும் தமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் தமக்கு வாக்குறுதிகளை தந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களை மறந்துவிட்டனர் எனவும் தெரிவித்தனர்.