- Tuesday
- May 19th, 2026
ஜனாதிபதி கையொப்பமிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (12) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவது அவசியமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதி...
யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐந்து பேரது இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு மேற்படி...
நாட்டில் யுத்தம் இல்லாததால், இராணுவ வீரர்களைக் கொண்டு கஞ்சா வளர்க்கும் முயற்சியை மேற்கொள்வதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அவசியமான மூலிகை மருத்துவத்திற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கஞ்சா மற்றும் அபின் என்பவற்றை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களின் அடிப்படையில், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்ததாகவும்...
பருத்தித்துறை –யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் நேற்று(13) மதியம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட முற்பட்ட சமயம் குறித்த நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். பிடித்த இளைஞனை அப் பகுதி...
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கின் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் ஒருவார காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னாயத்தமாக மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 3 லட்சம் பெறுமதியான காசுப் பிணையிலும்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், "மஹிந்த - சிங்கள செல்பி" என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில்...
சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் புகுந்த அடையாளம் தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய...
2020ஆம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியானது முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புகையிலை உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதத்தினால்...
இவ்வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளிலுள்ள வினாவில், சிக்கல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். கணித வினாத்தாளில் இரண்டாம் பகுதியில் 39 ஆவது வினா தொடர்பான விடையில் சிக்கல் காணப்படுவதாக விசனம்...
பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று நண்பகல் 12மணி முதல் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நுகர்வோரின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு, வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், ஆ. புவனேஸ்வரன், தியாகராஜா...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி காலிங்க...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிரான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்ட வில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய “ட்ரயலட் பார்” முறையில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கு அரசாங்கம் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாகவும், அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய அதன் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை மீது...
செப்டெம்பர் 20 முதல் 26 வரையான ஒருவார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான...
எம்மால் யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக்கிடைத்தது. அவ்வறிக்கையில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் மறுக்கின்றோம். எமது போராட்டம் தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். நிர்வாக உத்தியோகத்தர்கள் அவ்விடயங்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியமானது பின்வருவனவற்றை அறிக்கையிட விரும்புகின்றது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட எமது பல்கலைக்கழகமானது இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு இயங்கி வருகின்றது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று...
Loading posts...
All posts loaded
No more posts
