Ad Widget

ஜெனீவாவுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு, வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணமாகியுள்ளனர்.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், ஆ. புவனேஸ்வரன், தியாகராஜா மற்றும் முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோரே நேற்றுப் பயணமாகியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அரசாங்கம் கோரி நிற்கின்ற இவ்வேளையில் இவர்களின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பான விவாதம் இடம்பெறும்போது இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts