- Saturday
- May 16th, 2026
அரச முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 202 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சையில் பெற்ற பெறுபேற்றின் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் 202 பேரும் தெரிவாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 141 புள்ளிகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 133 புள்ளிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 136 புள்ளிகளும் வவுனியா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் வரவேற் கின்றோம். அவரை எம்முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடுக்கின்றோம். அவரை நாம் எதிரியாக எப்பொழுதும் கருதியது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கருமத்தை நாட்டில் நிறைவேற்றுவதற்கு அவரது ஒத்துழைப்பு தேவை. இந்த ஒத்துழைப்பை அவர் நல்கவேண்டும் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மந்தமான வெற்றியை பதிவுசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?, என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு...
கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கையில், “வவுனியா – வடக்கில் கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில், கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான காணியையும் நீண்ட...
புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாக மாறியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ஆட்சியமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் வெளியிலிருந்து ஆதரவளிக்க...
வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . யாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து...
இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான நாளை 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. “சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும் தொனிப்பொருளில் இந்த பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. கீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தில்...
பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உள்ளுராட்சி மன்ற தேர்தல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது என எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்கால...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்யும்...
வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இத்தேர்தலின் மூலம்...
தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளார் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யார் வந்தாலும் நாங்கள் தமிழ் தேசிய தளத்தில் இருந்து, கொள்கையில் மாற்றம்...
மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி...
தமிழினம் நடுத்தெருவில் நிற்கக் காரணமாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தினால், சமஷ்டி தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையுடன் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்....
என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அந்த அறிக்கையில், “எனது அரசியல் பயணத்திலே பல ஆண்டுகளாக பலம் சேர்த்த மக்களுடைய துன்பங்களே எப்போதும்...
யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆட்சிக்கு ஈ.பி.டி.பி. யினர் வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையை ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ள 10 ஆசனங்களே ஆட்சியை தீர்மானிப்பவையாக அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்திறன்...
உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் : யாழ் மாவட்டம் (நன்றி: வாகீசம் இணையம்) கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது. பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக்...
நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78% மன்னார்: 80% வவுனியா : 70% திருகோணமலை : 85%...
Loading posts...
All posts loaded
No more posts
