- Thursday
- May 14th, 2026
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தின் மூலம் முதல்வரிற்கான ஓர் வாசல்தலம் அனுமதிக்கப்பட்டபோதிலும், உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வரிற்கான ஓர் உத்தியோக பூர்வ இல்லம் வாடகைக்கு அமர்த்துவதற்கு கடந்த மாதாந்த அமர்வின் போது முதல்வர் அனுமதியை கோரியிருந்தார். இதனை சபை ஏற்றுக்கொண்டது. இதற்கமைய சுண்டுக்குழிப்...
செம்மணி உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...
யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் நேற்று (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில்...
யாழ்.மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்டச் செயலக...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக பெரும்பான்மையினருக்கு நியமனங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பின்பு உள் நுழைய முயன்ற மூவரை அனுமதிக்க மறுத்த காவலாளியை தாக்கி உள்நுழைந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை பார்வையிடுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நால்வர் இரவு 10 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்....
யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து இலங்கை மக்கள் விமான அம்பியுலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சேவையை அமுல்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து 8 விமான அம்புலன்ஸ்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்....
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த கொள்கையுடன் நேர்மையானவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சியொன்றை ஆரம்பித்தால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அவ்வாறு அவர் கொள்கையுடன்...
இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு...
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1990 ‘சுகப்படுத்தும் சேவை’ இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன. பொலிஸ் – நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய சம்பவங்களுக்கு அம்புலன்ஸ சேவை வழங்கப்படும் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் கடமையில் அமர்ப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு உள்பட நாடுமுழுவதும் இலவச அம்புலன்ஸ் சேவையை வழங்க இந்திய அரசு 22.5...
வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது....
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை. மேலதிகஅகழ்வுப் பணிகளும் பரிசோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் கடந்த வெள்ளிக் கிழமை நிலம் அகழப்பட்டது. மனித எலும்புக்கூட்டு...
ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வரன்...
நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்பாதுகாவலரின் ஒரு வருடநினைவஞ்சலி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சரத் பிறேமசந்திரவின் ஒரு வருட நினைவஞ்சலியில் நீதிபதி மா.இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது இளஞ்செழியன் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சரத் பிறேமசந்திரவின் உருவப்படத்திற்கு மாலை...
45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,...
கல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சேவை சங்கம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளன. அரசியல் இலாபத்திற்காக 1018 பேருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையை உடனடினாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன....
யாழ். சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அதிகாரிகளை பணித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான யாழ். மாவட்டத்திற்கான சமுர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் யாழ். நீராவியடியிலுள்ள...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டி ஆசிரியர் சங்கம் உள்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் திகதி சுகயீன...
வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள்...
Loading posts...
All posts loaded
No more posts
