- Wednesday
- May 13th, 2026
புதிய அரசியலமைப்பின் தயாரிப்பு பணிகளை ஜனாதிபதியும் பிரதமரும் துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமைவவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...
யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கோருவது போன்று பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்க முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய செயற்பாடு அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூரில் நேற்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் நடைபெற்றது. அனுராதபுரம் சிறையுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில்...
சுமார் 5 கோடி பேரின் முகநூல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் முகநூல் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளமாக முகநூல் உள்ளது. முகநூல் பயனர்களின் கணக்குகள் செயற்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு...
போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் என போதநாயகியின் தாயார் திருமதி நடராஜா தெரிவித்துள்ளார். உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை...
“யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ்...
யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்தி தங்கராசா (வயது-33) என்ற சுயாதீன ஊடகவியலாளருக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் வழிபாட்டுக்குச்...
முடி வெட்டுதல் உட்பட அழகக செயற்பாடுகளுக்கான விலையை வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம்அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட அழகக சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் அருண் தெரிவித்துள்ளதாவது, பொருளாதார ஏற்றத்துக்கு ஏற்ப அழகக சங்கம் தமது அங்கத்தவர்களின் ஆலோசனைப்படி விலை அதிகரிப்பொன்றைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த அதிகரிப்பு இருக்காது என்று...
இறுதி யுத்தத்தின் இறுதி இரு வாரங்களிலும் விடுதலைப் புலிகள் பலமான நிலையிலேயே போரிட்டு வந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா சபையில் பங்கேற்ற நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால அங்கு இலங்கைச் சமூகத்தினரைச் சந்தித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார். இறுதி தருணத்திலும், அவர்கள் மீண்டெழுந்து விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்காலம் என்ற...
கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா...
வடக்கில் இருந்து ராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் மக்கள் கோருவது, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தவே என ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட இலங்கை ராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மகேஷ் சேனாநாயக்க, “நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது....
வடக்கில் எதிர்வரும் காலங்களில் அமையவுள்ள மாகாண சபை தற்போதுள்ள மாகாண சபையை பார்கிலும் கூடுதல் வினைதிறனுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். யாழ்.அச்சுவேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு
அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஏற்கனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை...
மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறஸ்தவ மத விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலாத் தினம் - 2018 யாழ்ப்பாணம் மாநகர...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவு நாள் சட்டவிரோதமானது என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது,...
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளார். வேலணையைச் சேர்ந்த 32 வயதான 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி என்பவரே உயிரிழந்துள்ளார். பன்னீர்க்குடம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணித் தாய் கடந்த...
யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு...
யாழில் ஆறு வயது சிறுமியுடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் ஒருவர் தவறான நோக்கத்துடன் கையை பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ்...
Loading posts...
All posts loaded
No more posts
