தென்மராட்சியை மிரட்டிய வழிப்பறிக் கொள்ளையன் பொலிஸாரிடம் சிக்கினான்

தென்மராட்சியை மிரட்டிய வழிப்பறிக் கொள்ளையன் பொலிஸாரிடம் சிக்கினான் சாவகச்சேரி நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் நீண்டகாலமாக பெண்களின் கைபைகளை பறித்துச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர் கைது செய்யப்பட்டார் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். தச்சன் தொப்பு பகுதியில் வசித்தவரும் 23 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவரே சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். “சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின்...

குற்றச்செயல்கள் விசாரணைகளில் அலட்சியம்!! – யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உள்பட அனைவருக்கும் தண்டனை இடமாற்றம்

குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் மெத்தனப் போக்கைக் கடைபிடிப்பதால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க துணை போவதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பல தடவைகள் கண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவிலுள்ள பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக பொலிஸாரும் இடமாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் கடந்த மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் அசண்டையீனமாகச் செயற்பட்டதாக குற்றத்தடுப்புப் பொலிஸ்...
Ad Widget

மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், ‘மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும், போரில் இறந்தவர்களை மாத்திரமே தமிழ் மக்கள் அஞ்சலிக்க...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்...

யாழில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சட்டவிரோத கட்டடங்களால்...

மன்னார் மனித புதைகுழியில் 17 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்!

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 17 எழும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் சதொச வளாகத்தில் காணப்படும் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமான நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மனித புதைகுழியின் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ...

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்: 59 கைதிகள் உண்ணாவிரதம்

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தற்போது தீவிர நிலையை எட்டியுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையின் வெறும் எட்டு கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி அந்த எண்ணிக்கை தற்போது 59ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஆறு கைதிகளும், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 43 கைதிகளும் இன்று...

காரைநகர் உல்லாச விடுதிக்கு இடைக்காலத்தடை!

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதியின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. குறித்த உல்லாச விடுதியின் நிர்மாணப் பணிகளுக்கு தடை விதிக்குமாறு கோரி சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஊர்காவற்துறை...

விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறை!

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில்...

பல்கலைக்கழக மாணவர்கள் கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய போதும் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாண...

சிறுமி ரெஜினா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

சுழிபுரம் ஆறு வயது சிறுமி ரெஜினா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினா சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை...

இறுதி போர் தொடர்பான உண்மை ஜனாதிபதியே வெளிப்படுத்த வேண்டும்: சுமந்திரன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும்...

வவுனியாவில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்!

வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ´நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும்...

தொடர்ந்தும் பல பகுதிகளுக்கு பலத்த மழை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றும் வடக்கில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது, தமது உறவுகளுக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு படுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்....

யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 பேர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, அண்மைக்காலங்களில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது என மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள...

வடக்கு மாகாண சபை ஆளுநர் வசம்?

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. அதனையடுத்து, குறித்த மூன்று மாகாண சபைகளும் ஆளுநர் வசமாகவுள்ளன. வட மேல் மாகாண சபை எதிர்வரும் 8ஆம் திகதியும், மத்திய மாகாண சபை எதிர்வரும் 10ஆம் திகதியும், வடக்கு மாகாண சபை எதிர்வரும் 25ஆம் திகதியும் கலைக்கப்படவுள்ளதாக...

புதிய அரசியலமைப்பின் தயாரிப்பு பணிகளை ஜனாதிபதியும் பிரதமரும் துரிதப்படுத்த வேண்டும் – கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பின் தயாரிப்பு பணிகளை ஜனாதிபதியும் பிரதமரும் துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...

தமிழ் மக்களின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – சுரேஸ்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமைவவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...
Loading posts...

All posts loaded

No more posts