தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன்...

விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் – தமிழரசுக் கட்சி

முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்க மகிந்­த­வு­டன் இணைந்து செயற்­ப­டு­வேன் – மைத்­தி­ரி­பால சிறி­சேன

வடக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க புதிய தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் முழு­மை­யான அர்ப்­ ­பணிப்­பு­டன் செயற்­ப­டு­வோம் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். மைத்­திரி – மகிந்த அணி இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த மக்­கள் பலம் போராட்­டம் கொழும்பு நாடா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு...

அடுத்த தீபா­வ­ளிக்­கா­வது ஒரு தீர்வு வந்து சேரட்­டும் – இரா. சம்­பந்­தன்

2019ஆம் ஆண்டு வரும் தீபா­வ­ளிக்­குள்­ளா­வது தமி­ழர்­க­ளுக்­கான நிரந்­தர தீர்வு பெற்­றுக் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்­தன் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கோரிக்கை விடுத்­தார். கடந்த 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்­டு­க­ளி­லும் தீபா­வ­ளிக்­குள் தீர்வு வரும், வர­வேண்­டும் என்று சம்­பந்­தன் தெரித்­தி­ருந்த நிலை­யில் இந்த ஆண்­டும் அவர் மைத்­தி­யி­டம் இந்­தக்...

கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ9 வீதியில் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உரியிழந்துள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற...

தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன் – வியாழேந்திரன்

11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கைகளில் 30 சதவீதம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிலிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த 11 அம்ச கோரிக்கைகளில் 30 விகிதம்...

விடுதலை புலிகளின் பெயரை கூறி சிலர் பிழைப்பு நடத்துகின்றனர்!!

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை என கூறுபவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளிகள் இல்லை என கூற வேண்டும் அப்படி செய்யாமல் இந்த குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை கூறி சில அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்....

யாழில் கொள்ளைக்கும்பலுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். கொள்ளையர்களின்...

ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது!

ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரே சற்றுமுன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில்...

இன்று இரவு காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்!

இன்று (05) இரவில் தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது நவம்பர் 6 - 8 காலப்பகுதியில் மேற்கு - வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவுக்கு குறுக்காக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் காரணமாக...

பொலிஸ் உத்தியோகத்தர் ஏமாற்றிவிட்டார்!!! பொலிஸ் நிலையத்திற்கு முன் இளம்பெண் தற்கொலை முயற்சி!!!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுத்த பொலிஸார், கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அந்த இளம் பெண்ணை பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில்...

யாழில் போலி லேபலுடன் விற்கப்பட்ட குடிநீர் போத்தல்கள்!!

யாழில் சட்டவிரோதமாக போலி லேபலுடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 6 ஆயிரம் குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்தின் மீது நேற்றையதினம் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது குடிநீர்ப்போத்தல்கள் நிறுவன பதிவு இலக்கம்...

தமிழ்க் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இனி எவ­ரும் தாவமாட்­டார்­கள் – இரா.சம்­பந்­தன்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள் என்று நான் நினைக்­க­வில்லை. அது நடை­ பெ­றாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இந்­தி­ய தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். வியா­ழேந்­தி­ரன் கட்சி தாவி­யமை தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, அவ­ரைப் பற்றி எமக்கு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட...

மைத்திரியின் அரசியல் அழிவு ஆரம்பம்: சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்...

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் – விசேட வர்த்தமானி வெளியீடு

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை...

அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களைக் கண்டறிவதில் பாரிய சவால்: மாவை

தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறினார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல்...

கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் சவால்!

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

புதிய பிரதமருக்கு ஆதரவில்லை: சித்தார்த்தன் திட்டவட்டம்

நாட்டின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக...

இரத்தக்களறி ஏற்படும் அபாயம்!! – ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் இரத்தக்களறியொன்றை தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts