Ad Widget

தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன் – வியாழேந்திரன்

11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கைகளில் 30 சதவீதம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிலிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த 11 அம்ச கோரிக்கைகளில் 30 விகிதம் கூட நிறையவேற்றப்படவில்லை என்றால் இந்த அரசாங்கத்தை கூட விமர்சிப்பேன் என்றும் கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேசும் பங்கேற்று, தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts