Ad Widget

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் – விசேட வர்த்தமானி வெளியீடு

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை ஒத்திவைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சர்வதேச தரப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தல் விடுத்து வந்தன.

அதேவேளை, நாடாளுமன்றில் தமக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதாகவும், அரசியலமைப்புக்கு ஏற்பவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை பிரதமராக தெரிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts