மானிப்பாயில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்!

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள்வெட்டுக்கும்பல் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக மானிப்பாய் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள், யன்னல்கள், என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன், வீட்டினுள் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது. அத்துடன்...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பலவீனம் காணமாக மக்களின் உடலில் உஷ்ணம் மேலும் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகளவு நீர் அருந்துமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இந்த காலநிலை மேலும் அதிகாரிக்க கூடும் என்பதனால் அதிக வெப்ப நிலை அதிகரிக்கும். வெளி இடங்களில்...
Ad Widget

இந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிக்கு இடமளிக்கவேண்டாம் – விக்னேஸ்வரன்

இந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு...

யாழ். பல்கலையில் பகிடிவதை தொடர்கிறது – மாணவர் ஒருவர் படிப்பை இடைநிறுத்தினார்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும், தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி...

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்திய அரசு அனுமதி!

வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களும்...

இராணுவ வெற்றியின் பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடம் பிரகடனம்

எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து எமது தாய்நாடு விடுவிக்கப்பட்ட இராணுவ வெற்றியின் பத்து வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆட்புல எல்லை மற்றும் இறைமையை பாதுகாப்பதற்காக உயிர்நீத்த, காணாமற்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும் நினைவுகூருவதற்கும் ஒவ்வொரு வருடமும் இராணுவ நினைவு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு...

புதிய வரவு செலவு திட்டம்: வாகன விலைகளும் அதிகரிப்பு

2019ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவு திட்டத்தின் கீழ் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிசொகுசு வாகனங்களுக்கான உற்பத்தி வரி திருத்தியமைக்கப்படவுள்ளதுடன், சிறிய கார்களுக்கான வரி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, 1300 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரியை 5 இலட்சம் ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 800 சிசி-க்கு...

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இதனை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அந்தவகையில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவைக்கு 5000 ரூபாயாலும் சாதரண சேவைக்கு 3000 ரூபாயாலும்...

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அமெரிக்க தூதுவர் – சம்பந்தன் பேச்சு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் கூறியுள்ளார். மேலும் குறித்த சந்திப்பின்போது சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்மையும் இல்லை தீமையும்! இல்லை!! ஆராய்ந்தே முடிவெடுப்போம் – சம்பந்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன்...

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி வரவேற்கத்தக்கது – சுமந்திரன்

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் – அரசாங்கம்

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் மாதாந்தம் இந்த கொடுப்பனவு வழங்க...

சாவகச்சேரி சமாதான நீதவானுடைய வீட்டின் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடொன்றின் மீது வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி சமாதான நீதவானுடைய வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இவரது வீட்டிற்கு தலைக்கவசம் இல்லாது, இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருபது பேர் கொண்ட இனந்தெரியாத நபர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல்...

கிளி.கொலை சம்பவம் – வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது

கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக, ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார்...

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெறுவோருக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு

“க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். 2019ஆம் ஆண்டு ஓகஸ்டில் 14 மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பெறுவர். அவர்கள் 10 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவையாற்றவேண்டும்” என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி அரசின், ‘மங்கல’ வரவு –...

அரச ஊழியர்களுக்கு ஜூலை முதல் 2,500 ரூபா மேலதிகக் கொடுப்பனவு

019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களுக்கான சம்பளத்துடன் சிறப்புக் கொடுப்பனவு ஒன்று இணைக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார். இந்த அதிகரிப்பு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதற்காக 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான...

“இது ஆவா குழுவின் இராச்சியம்” குழப்பத்தில் மக்கள்!!

யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் ‘ஆவா 001 இராஜ்ஜியம்’ என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் ‘ஆவா 001 இராஜ்ஜியம்’ என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த பதத்தை எழுதிய பின்னணியில் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்ற...

கிளிநொச்சியில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை! பிரதேசத்தில் பதற்றம்!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்ற ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் (வயது-33) என்பவரே கொலையுண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...

வடக்கில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆள்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கை மற்றும் வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பாகநேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி...

வலி. வடக்கில் 20 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி விடுவிப்பதற்கான ஆவணத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வழங்கி...
Loading posts...

All posts loaded

No more posts