Ad Widget

வலி. வடக்கில் 20 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி விடுவிப்பதற்கான ஆவணத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வழங்கி வைத்தார்.

கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் வலி. வடக்கில் பலாலி வடக்கு மற்றும் ஏனைய பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பலாலி வடக்கு உட்பட மயிலிட்டித்துறை பகுதியில் உள்ள 3 கிராம சேவையாளர் பிரிவில் காணி விடுவிக்கப்பட்டது.

அந்தவகையில், வலி.வடக்கு பலாலி கிழக்கு ஜே.253 கிராம சேவையாளர் பிரிவில் 1 ஏக்கரும் 120 குழியும், ஜே.251 கிராம சேவையாளர் பிரிவில் 3 ஏக்கரும், ஜே.246 கிராம சேவையாளர் பிரிவில் 13 ஏக்கரும் 155.6 குழியும், அதன் பாதையுமாக மொத்தம் 19.7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில், 20 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts