Ad Widget

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெறுவோருக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு

“க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். 2019ஆம் ஆண்டு ஓகஸ்டில் 14 மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பெறுவர். அவர்கள் 10 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவையாற்றவேண்டும்” என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின், ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (5) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சமர்பித்து உரையாற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாவது:

3 லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும் 35,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு ‘ மை பியுச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் . அதனை மீளச் செலுத்தும் காலம் 2 ஆண்டுகளின் பின் ஆரம்பமாகி 10 ஆண்டுகளில் நிறைவடையும்.

பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Related Posts