கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் அலுவலகத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு...

படையினர் வசமுள்ள காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை

யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியுள்ளார். யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராய்ச்சியிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர், யாழ். கட்டளைத் தளபதியுடனான கலந்துரையாடலிலேயே இந்த...
Ad Widget

திருக்கேதிஸ்வர விவகாரம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த வளைவை சில கத்தோலிக்க மதத்தவர்கள் வன்முறையூடாக அகற்றியமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சைவ மக்கள் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரிக்கு முதன்...

திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர்களை அச்சுருத்தும் வகையில் துண்டுப்பிரசுரம்

மன்னாரிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுருத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் வடிவிலான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போதே அப்பகுதியியை அண்மித்த பகுதிகளில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “மன்னார் வாழ்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2019

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் என்பதனால் முக்கியத்துவம் பெறுகின்றது. வரலாறு முதன் முதலில் 1789 ஆம் ஆண்டு சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற...

வடக்கின் 4 மாவட்ட செயலகங்களிலும் சிங்கள சிற்றூழியர்கள் நியமனம்!

வடக்கில் சிங்கள சிற்றூழியர்கள் நியமனம் தொடர்கிறது. நான்கு மாவட்ட செயலகங்களில் 7 சிங்களவர்கள் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னனர், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தது. இதன்போது அலரி மாளிகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள்- ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்புக்கள் நடைபெற்றன. இதன்போது, வடக்கில் சிங்கள ஊழியர்கள் நியமிக்கப்பட...

அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) போராட்டம் இடம்பெறும் இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதனை...

செம்மணி பகுதியில் சிவலிங்கம் வைப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிவலிங்கம் ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் உள்ள யாழ். வளைவுக்கு அருகிலேயே குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இந்துக்களின் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பாதையில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தையும் உடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்துக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது. எந்த காரணத்தையும் கொண்டும்...

செவ்வாயன்று வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை!

வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காவே பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார். மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் தெரிவித்த ஆளுநர் இத்தினத்திற்கான பதில் பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும்...

கிளிநொச்சியில் ஏழு நாட்களாக 14 வயது சிறுவனை காணவில்லை!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை சிறுவனின் தந்தை வழங்கியுள்ளார். ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 9-ல் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த...

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்க முன்வர வேண்டும் – யாழில் போராட்டம்!

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா முன்வர வேண்டும் என வலியுறுத்தி யாழில் நேற்று ஆலய வழிபாடுகளும் கையெழுத்து போராட்டமும் நடைபெற்றன. வலிந்தும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினர் வடக்கு, கிழக்கு ரீதியாக மூன்று இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த சில நாட்களில் முப்பதாயிரம் கையெழுத்துக்களை பெற்றுள்ள நிலையில் மேலும்...

மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ்

மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எமது கட்சி தீவிரமாக நம்புகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது தொடர்பில்...

சிவலிங்கம் அமைத்தால் அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்போமென அச்சுறுத்தல்!

திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் சிவலிங்கம் சிலை அமைக்கப்பட்டால், அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்போம் எனக்கூறி சிங்கள மக்கள் முரண்பட்டு வருவதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சிவராத்திரி முடியும் வரையில் குறித்த இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதற்கு கோயில் நிர்வாகத்தினர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம்...

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதிக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger இற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடக்கு மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும்...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பஸ் விபத்து: பலர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சாரதி உள்பட பயணிகள் பலர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பரந்தனில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்ப்பு நோக்கி பயணித்த பேருந்து பரந்தனில் ஏ9 வீதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் சாரதி...

அநீதிகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதலை நடத்தினர் – இம்ரான் கான்

விரக்தி மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும், செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே இந்துக்களான விடுதலை புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதல் முறைமையை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என பாகிஸ்தான்...

ரவிராஜ் கொலைக்கு கருணாவிற்கு 5 கோடி வழங்கினார் கோட்டா?

யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த தொகை கருணா தரப்பினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ரவிராஜ் கொலை...

வாள்வெட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு பிணை!

வாள்வெட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது. 3 மோட்டார்...

வடக்கில் குற்றச் செயல்களுக்கு முடிவுகட்ட 850 தமிழ் பொலிஸாரை இணைக்க முடிவு

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளனர். இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து இணைய வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே...
Loading posts...

All posts loaded

No more posts