- Saturday
- May 9th, 2026
புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரவாதிகளுடையவை எனும் பட்சத்தில், அவர்கள் ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார். அத்தோடு உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக்கூடாது என்றும் இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே...
நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே பொலிஸாரால் இன்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி...
புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் தாம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியதுடன் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டையும் பதிவுசெய்தனர். நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளில்...
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி...
யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சூளுரைத்துள்ளார். யாழ். மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் ஆவாக் குழுவின் உறுப்பினர் என பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர். இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன்...
* அரசியல் சதிப் புரட்சியை முறியடித்தேன். * பிரதமர் ரணிலைக் காப்பாற்றினேன். * ராஜபக்சக்களின் வலையில் சிக்கவில்லை. * கட்சிக்குத் துரோகமிழைக்கவில்லை. * தந்தையின் வழியில் பயணிப்பேன். * ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பேன். * நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன். "ஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சகல...
வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணம் முழுமையாக ஆயிரத்து 905 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் 5 மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...
2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இதவரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. https://doenets.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தில்...
மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது தப்பிச்சென்ற வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த மூவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் இணுவில் வீதியில் கடந்த சனிக்கிழமை இரவு...
வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று (23) மாலை இடம்பெற்றது. வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயவங்கள் மற்றும்...
“பனை மான்மியம்” எனும் தலைப்பிலான வடக்கு மாகாண பனை எழுச்சி வாரக் கண்காட்சி நேற்றுத் திங்கட்கிழமை(22) முற்பகல்-09.30 மணியளவில் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது. “பனை எங்கள் சூழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம்” எனும் தொனிப் பொருளில் இம்முறை பனை எழுச்சிவாரம் இடம்பெறுகிறது. வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் பொ....
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது எனப் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவின் நிரந்தரத் தீர்ப்பு எதிர்வரும் 5ம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கி உத்தரவிட்டதோடு அமைச்சரவையும் மாற்றம் செய்திருந்தார். அவ்வாறு தன்னை இடை நிறுத்தியமை சட்டவிரோதமானது...
அரச வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 1570 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...
"சந்தையில் உள்ள ஊதுவர்த்திகள் ஒரு தீவிர நச்சு புற்றுநோயாகும்" என சுகாதார அமைச்சின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர்.இனோகா சுரவீரா எச்சரித்துள்ளார்.. இலங்கையில் ஊதுவர்த்திகளின் உடல்நல பாதிப்புகள் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை ஆனால், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஊதுவர்த்திகளில் பலவிதமான நச்சு இரசாயனங்கள் உள்ளன, அவற்றில் கொந்தளிப்பான...
இலங்கை மின்சார சபை பல விடயங்களில் மேன்மை அடைந்து விட்டது ஆனால் அதன் பராமரிப்பில் உள்ள வீதி மின் விளக்குகளை பராமரிப்பதில் அதில் திருத்தங்கள் செய்வதில் இன்னமும் மேன்மை அடையவில்லை. அசமந்த போக்கே தொடர்கின்றது. என யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் குற்றம்சாட்டியுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.மாநகர சபையின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார உறுப்பினர்கள்...
சந்திராயன் -2 இன்று விண்ணில் ஏவப்பட்டது! இதன் சிறப்புகள் பல அவற்றுள் முக்கியமானது இந்தச் செயற்கைக் கோளின் முழு ஆணைகளும் (Commands) ரிது, வனிதா என்ற இரு பெண்களால் நிர்வகிக்கப்படும். இந்தத் திட்டத்தின் இயக்குநரே (Mission Director) ஒரு பெண்தான். ரிது செவ்வாய்க்கு இந்தியா விண்கலம் அனுப்பியதில் (மங்கல்யான்) முக்கியப் பங்காற்றியவர். வனிதா விருது பெற்ற...
திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் விவகாரம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா, வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோகில ரமணி எனும் பெண் எழுத்தானை விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர், கொழும்பு...
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல.57/1, சோமசுந்தரம் சதுக்கம், மாமாங்கம், மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ளதமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மட்டக்களப்புமாவட்ட பணிமனை இன்று திங்கட் கிழமைநண்பகல் 12.30 மணியளவில் செயலாளர்நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால்வைபவ ரீதியாக திறந்து வைத்து மாவட்டபணிமனை பெயர் பலகையையும்திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாக இணைஉப செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டஅமைப்பாளருமான எஸ்.சோமசுந்தரம், பொருளாளரும் பொருளாதாரவிவகாரங்களுக்கான உப செயலாளருமானபேராசிரியர் வி.பி.சிவநாதன், நிர்வாக இணைஉப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகாரங்களுக்கான உப செயலாளர் திருமதிரூபா சுரேந்திரன், மகளிர் அணி உப செயலாளர்திருமதி இளவேந்தி நிர்மலராஜ், ஊடகம் மற்றும்செயற்றிட்ட ஆக்கங்களுக்கான உப செயலாளர்த.சிற்பரன், தொகுதி அமைப்பாளர்இரா.மயூதரன், இளைஞர் அணி அமைப்பாளர்கே.கிருஸ்ணமீனன், வவுனியா மாவட்டஅமைப்பாளர் செ.சிறீதரன், கிளிநொச்சிமாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடகஉதவியாளர் சதீஸ் ஆகியோர்பங்கேற்றிருந்தார்கள். மட்டு. மாவட்ட பணிமனைக்கு அண்மையாகஅமர்ந்திருந்து அருளாசிகளைவழங்கிக்கொண்டிருக்கும் மாமாங்கேசுவரப்பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்றதிருவிழாவிற்கு சென்று வழிபாட்டினைமேற்கொண்டதன் பின்னர் மாவட்டபணிமனையை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாமாங்கம் பகுதிமக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.
சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத் திருமணம் செய்தால் மேலும் வளர்ச்சியடையலாம் என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்ய முற்பட்டார் ராஜகோபால். இந்நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார்...
Loading posts...
All posts loaded
No more posts
