1000 விகாரைகள் அமைக்க 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கிய கூட்டமைப்பினர்!! – டக்ளஸ்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என முன்மொழியப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை...

யாழ் காவற்துறை திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

யாழ் காவற்துறை திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றும் 35 வயதுடைய ஜெகநாத குருக்கள் கிருபாலினி என்ற குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டி கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளார். கழுத்தில் ”சோல்” ஒன்று சுற்றப்பட்டிருந்ததாகவும்,...
Ad Widget

சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!

13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது....

மதவாச்சியில் கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!

மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்த...

வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு சென்றனர் ஒரு தொகுதி அகதிகள்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர், நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர். சுயவிருப்பத்தின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவும் அதற்கு முன்தினமும் 6 பேர் இவ்வாறு நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர். அதற்கமைய நேற்று முந்தினம் ஐவரும் நேற்று இரவு ஒருவரும் சென்றுள்ளதாகவும் மேலும் 9பேர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும்...

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் வழங்கியுள்ளார். இந்தச் சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலை நடத்தப்படவேண்டும். பதில் பாடசாலைக்கான...

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக...

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!

அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் நேற்று பதிவுகளை மேற்கொண்டனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு...

தையிட்டி பகுதியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிவு!

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். விகாரை அமைப்பு தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் வெதுப்பகங்கள், சீமெந்து தொழிற்சாலைகளில்...

மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்...

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் நேற்று (வியாழக்கிழமை) மூன்றாம் திருவிழா நடைபெற்றது. இதன்போது மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர். குளவிகள் பலருக்கும் கொட்டிய...

மின்னல் தாக்கத்தினால் வான், லொறி தீயில் எரிந்து நாசம்!!!

மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன மின்னல் தாக்கி தீப் பற்றி எரிந்து நாசமாகின. டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பாரவூர்தி முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் சுதன்...

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு!

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் நாட்டில் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்திது உரையாடியபோது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்...

அரச ஊழியர்களுக்கு நேற்று முதல் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான 2,500 ரூபா கொடுப்பனவு நேற்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருக்கிருக்கின்றது. இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் 2,700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 107 சதவீதத்தால்...

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன்

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிய அரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து...

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

கிளிநொச்சி – பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் செல்லும் பெண்களிடம் தங்கச் நகைகளை அறுத்து செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(வியாழக்கிழமை) காலை அலுவலக கடமைக்காக சென்று கொண்டிருந்த கிராம அலுவலரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியினை அறுத்துச்சென்றுள்ளனர் குறித்த...

யாழில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர், இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து...

முல்லைத்தீவில் இளைஞனுக்கும் யுவதிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த சஜித் பிரேமதாச!

முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் . குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை அழகாக ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா...

இலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம்

இலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வருகின்ற தேர்தல்களில் அதற்கான சாத்தியம் இல்லை எனிலும் 2020 இல் அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது இலங்கையின் இடம்பெறும் தேர்தல்களின்போதும் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை ஏற்படுத்தினால் அதன்போது எவ்வகையான இலத்திரனியல் பாதுகாப்புக்களை மேற்கொள்வது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பணிமனையில் இடம்பெறும்...

கடற்படையிடம் கையளித்த தனது மகனைத் தேடியலைந்த தாய் முல்லைத்தீவில் மரணம்!

கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி அலைந்த தாய் ஒருவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார். இவ்வாறு நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார்....
Loading posts...

All posts loaded

No more posts