Ad Widget

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கில் 5ம் திகதி தீர்ப்பு

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது எனப் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவின் நிரந்தரத் தீர்ப்பு எதிர்வரும் 5ம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் வழங்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கி உத்தரவிட்டதோடு அமைச்சரவையும் மாற்றம் செய்திருந்தார். அவ்வாறு தன்னை இடை நிறுத்தியமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கிற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரனே தொடர்ந்தும் சட்டபூர்வ அமைச்சர் எனவும் அவரை நீக்கியமை செல்லாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் யாவும் நிறைவுற்று இரு தரப்பின் இறுதிச் சமர்ப்பனங்களும் நிறைவுற்ற நிலையில் நேற்றைய தினம் இறுதித் தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதல் 5ம் திகதி இடம்பெறும் என நீதியரசர்களான மகிந்த சமயவர்த்தன மற்றும் பிரியந்த பெனான்டோ ஆகியோர் வழக்கினை ஒத்திவைத்தனர்.

Related Posts