- Friday
- May 8th, 2026
இந்த தேசத்தை மீளவும் கட்டியெழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச புகைப்பட ஆலோசனைக்குழு, கலாசார அமைச்சு, இலங்கைக் கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சி இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை கலாநிதி சுரேன்...
குளோபல் லைவ் ஸடரைல் லங்கா நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். யாழ்.மாநகர சபை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் கூடியது. இதன்போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ்...
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை...
தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதற்கு யாழ். மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும்...
யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இந்த...
தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
அரியாலை அருளம்பலம் வீதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட துப்பரவு நடவடிக்கையின் போதே இன்று (வியாழக்கிழமை) காலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். குறித்த பகுதியில் மேலும் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கம் மரங்கள் வனவளத் திணைக்களத்தால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பயன் தரும் தேக்கம் மரங்கள் நடப்பட்டன. அவை வனவளத் திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. நேற்று காலை முதல்...
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும்...
முல்லைத்தீவு- மல்லாவியைச் சோ்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மல்லாவியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதனின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 2009 ஜனவரி 20ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட...
யாழ்ப்பாணம் – மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் மறவன்புலவு மக்களினால் இன்று (புதன்கிழமை) கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும்...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவுக் குழுவினால் இது குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய...
எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்து வர...
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, குறித்த பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்....
இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகள், மடி கணினி, 4 தொலைபேசிகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களையும் சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவிலில்...
நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை (புதன்கிழமை) காலை 8.00 மணி முதல் இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக குறித்த சங்கம் பல தடவைகள்...
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளி வரையிலான காலப்பகுதியில் விவசாயக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின்...
வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாக ஆக்கப்பட்டாலேயே தமிழ் மக்களின் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடைபெற்றது....
Loading posts...
All posts loaded
No more posts
