Ad Widget

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவுக் குழுவினால் இது குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts