இந்தியா தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!!

குரூர் ப்ரம்மா… எனதினிய தமிழ் மக்களே! பல்லாயிரக்கணக்கில் இங்கே வருகை தந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் கூறி வைக்கின்றோம். “அழுத குழந்தையே பால் குடிக்கும்” என்பார்கள். குழந்தை அழுதால்தான் தாய்க்கு அதன் பசி பற்றி பொதுவாக நினைவுவரும். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் கூட அழுபவர்களுக்கே வரம்...

தமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – அரசாங்கத்திடம் வலியுறுத்தினார் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்...
Ad Widget

சர்வதேசமே! இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு விசாரணையை நடத்து!!! – எழுக தமிழ் பிரகடனம்

அன்பான தமிழ் மக்களே, இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள்...

எழுக தமிழ் பேரணி முற்றவெளியை வந்தடைந்தது!!

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலை வந்தடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இன்று முற்பகல் ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை...

இணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது!!

இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது...

வட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம்!!

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்குண்டுதால் மனைவி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவரை ஏற்றிச் சென்ற கணவரை நடுவீதியில் வைத்து வட்டுக்கோட்டை காவற்துறையினர் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டையிலிருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு இளம் குடும்பத்தலைவர் சித்தன்கேணிக்கு பயணித்துள்ளார். சங்கரத்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டு மனைவி...

அடுத்த 24 மணி நேரத்தில் 150 மி.மீ மழை வீழ்ச்சி!!

நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த 24 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த...

தமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுடன் ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்!

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக கடைகள் அனைத்தும்...

எழுக தமிழ்-2019 ஏற்பாடுகள் குறித்த ஊடக அறிக்கை

முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு...

நீதிமன்றில் தற்கொலைக்கு முயன்ற சந்தேகநபர்!!

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி உயிர் துறப்புக்கு முயற்சித்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த...

யாழ். பல்கலையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று ஆதரவு!!

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டக்களத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்தோடு அவர்களுடன்...

நல்லூரிலிருந்து ஆரம்பமானது பாதயாத்திரை!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது. இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்று, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது. இந்த பாதயாத்திரை செல்லும்...

தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறும் எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு, தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பின மூலம் வழமை மறுப்பு போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் ஒன்றுபட்டு, தென்னிலங்கை...

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்ட நிதியை மோசடி செய்தவர் தலைமறைவு

வடக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் பல கோடி ரூபா நிதியை மோசடி செய்த முக்கியஸ்தர் ஒருவர் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் இலங்கையில் தலைமறைவாகி உள்ளதாக அவர்களிடம் உதவித் திட்ட நிதியை வழங்கிய நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை...

காணாமல்போனோரை நினைவுகூறும் இடங்கள் அமைக்கப்பட வேண்டும் – ஐ.நா.

காணாமல்போனோரை நினைவுகூறத்தக்க இடங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. 42ஆவது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. இந்த பேரவையில் குறித்த செயற்குழு முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

திடீரென தீ பிடித்து எரிந்த வாகனங்கள்!!

பருத்தித்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளன. அத்தோடு இந்த அனர்த்தத்தில் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அனர்த்தம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் பேருந்து, கயஸ்ரக வாகனம், முச்சக்கரவண்டி ஆகியன வீட்டிற்கு வெளியே...

யாழ்.பல்கலை. நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டோர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் குறிப்பிட்ட சில பணிநிலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876ம்...

வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பொலிஸார் தீவிர தேடுதல்!!

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா பொலிஸாருக்கு இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே...

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய தகவல்!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன் அடையாளம் காண்பதற்கான முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உயிரியல் தகவல்களை...
Loading posts...

All posts loaded

No more posts