திடீரென தீ பிடித்து எரிந்த வாகனங்கள்!!

பருத்தித்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளன.

அத்தோடு இந்த அனர்த்தத்தில் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அனர்த்தம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் பேருந்து, கயஸ்ரக வாகனம், முச்சக்கரவண்டி ஆகியன வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts