- Thursday
- May 7th, 2026
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைவருக்கும் உணவுப் பொருள்களை கொள்வனவு செய்ய சிறப்பு இலத்திரனியல் அட்டையொன்றும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஊடகப் பிரிவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சமூர்த்தி உதவி பெறுவோர்,...
அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை தூரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தமிழ் ஊடகங்களின் முக்கியஸ்தர்களுடன் நேற்று முன்தினம் (14) அலரி மாளிகையில் ,இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். தமிழ் மக்கள்...
இலங்கையில் எரிபொருளின் விலையினை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக...
கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சி கரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான...
யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலையடுத்து பொதுமக்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நேற்றிரவு(புதன்கிழமை) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
சுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வளங்கப்படுவதாகவும் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அந்தவகையில் ஒவ்வொரு மாதமும்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் நடாத்தும் பொங்கல் திருவிழா 2020 எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாக இடம்பெறவுள்ளது. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய பண்பாடு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க்...
பிரபல திரைப்பட நடிகா் சுப்பா் ஸ்ராா் ரஜனி காந்தை தமிழகத்தில் சிநேகபூா்வமாக சந்தித்த முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா். நிகழ்வு ஒன்றுக்காக தமிழகத்திற்கு சென்றுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகா் ரஜனிகாந்தை சென்னையில் சந்தித்து பேசியிருந்தாா். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனா். இலங்கையில் தற்போது...
குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இளைஞன் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளான். இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் முன் பாய்ந்தே உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளான். பருந்துறை பகுதியில் கடை எரிப்பு...
யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது....
வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் பொலிஸாரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர்...
வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 200 பேர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் ஆயிரத்து 400 பேர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் 400 பெண்கள், பெண் பொலிஸ் கொஸ்தாபல்...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்து தருமாறு, ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரனைகொலை செய்ய முயன்றார்கள் என்ற...
எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் உறுப்பினர் ஆர். சம்பந்தன் நேற்று உரையாற்றுகையில், அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எமக்கு உண்டு என்றும் கூறினார். ஜனாதிபதியின் கொள்கை...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீடு தருவதாக கூறி நெடுந்தீவில் உள்ள ஈபிடிபி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறப்புச் சான்றிதழ் மற்றும் வாழ்வாதார உதவிகள் மற்றும் வீட்டுத்திட்டம் என்பன தருவதாக கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் சுமார் 27 பேர் பதிவு செய்யப்பட்டுள்ள...
தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்லவென கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்ச்ர டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்வதற்காகவே அமைச்சரவையில் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அக்கிராசன உரை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...
இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து மத்திய கிழக்கின் ஈராக் போன்ற நாடுகளிற்கு பயணிக்கும் வெளிநாடு பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது கோரப்பட்டுள்ளது. அத்துடன் தமது பயண ஆவணங்களை எந்நேரமும் தம்...
யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் குவிந்து கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. எாிபொருளுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு வரலாம் எனவும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமொிக்காவுக்கும் இடையில் பதற்றமான சூழுல் உருவாகியிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி இந்த கதைகள் கட்டப்பட்டுவருகின்றது. எனினும்...
2019 இல் நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிக்கமைவாக யாழ் இந்துக்கல்லுாரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வியமைச்சு பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது இதனடிப்படையில் அதிபரினால் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்க்கடிதத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பத்தினை கல்லுாரியின் இணையத்தளமான www.jhc.lk இலோ நேரடியாகவோ பெற்று...
Loading posts...
All posts loaded
No more posts
