யாழ்.மாநகரசபை உறுப்பினருடன் சண்டித்தனம் காட்டிய கல்வியங்காடு சந்தை குத்தகைகாரா் மற்றும் பொலிஸாா்!!

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிா்ப்பு தொிவித்து கல்வியங்காடு சந்தை வியாபாாிகள் புறக்கணிப்பு போராட்டம் நடாத்திய நிலையில், அங்கு சென்ற மாநகரசபை உறுப்பினரை சந்தை குத்தகைகாரரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனா். சந்தை வா்த்தகா்களிடம் தலா 100 ரூபாய் வாடகை அறவிடப்படவேண்டும். என குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாடகை அறவிட்டமைக்கான சிட்டை வழங்கப்படவேண்டும் என்பதும் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் 100 ரூபாய்...

தமிழமுதம் விழா யாழ்.பல்கலையில் ஆரம்பம்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்விழாவில் இவ்வருடம் “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்” என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நோக்கிய எழுச்சிப் பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் கலாசார –...
Ad Widget

70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பம்!

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியுடன் நிறைவு பெறவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். 70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சில கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த கட்சிகள் தமது கணக்கறிக்கையை சமர்ப்பிக்காததன் காரணமாகவே...

சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? – மஹிந்த அணி கேள்வி!

இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சி தலைவரின் கன்னியுரை இன்று சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற...

சூரியனுக்கு அருகாமையில் பயணிக்கும் பூமி – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பூமியானது தற்போதைய நாட்களில் சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நிமோனியா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு முன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு...

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு எதிராக கல்வியங்காடு பொது சந்தை வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்.கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று கதவடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்.மாநகர சபை முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை, வரி அறவீட்டை இரண்டு மடங்காக மேற்கொள்கின்றமை, போன்ற செயற்பாடுகளைக்...

யாழ் மாநகர சபையால் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

யாழ் காக்கை தீவு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் மாநகர சபையால் ஆரம்பித்து வைக்கப்பப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மாநகர சபையின் எல்லைப் பரப்பில் உள்ள விடுதிகள் , உணவகங்களில் இருந்து அகற்றப்படும் கழுவு நீர் சுத்துகரிப்பில் நீண்டகாலமாக எதிர் நோக்கி வந்த பிரச்சணைக்கு தீர்வாக மாநகர...

ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்

நாடு முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். புதிய மக்கள் மய கொள்கையின்...

வீடு மற்றும் சிறிய வியாபார நிலையக் கட்டுமானங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க ஜனாதிபதி பணிப்பு!!

வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்புக்...

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற்றுக்கொள்ள மேலும் 3 அலுவலகங்கள்

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவம் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழ் போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது உள்ள நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு போக்குவரத்து...

சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் – அங்கஜன்

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

ஆன்மீக அரசியலில் ஈடுபடும் தன்னுடன் கைகோர்க்குமாறு டக்ளஸ் அழைப்பு

ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற தன்னுடன் மக்கள் அணிதிரண்டு கைகோர்த்தால் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மட்டுமன்றி வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்த முடியும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைமன்னார் இறங்குதுறை கிராமம், கீளியன்...

அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை!

ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கவெரட்டிய பிரதேசத்தில் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண...

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்காக இலவச ஆடை வங்கி!!

வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கத்தினை ஸ்தாபகராக கொண்டு ஆரம்பிக்கப்படும் இலவச ஆடை வங்கி, எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில்...

யாழில் அதிகரித்து வரும் தற்கொலை: வீடு வீடாக களமிறங்கினார் நல்லூர் பிரதேசசபை பெண் உறுப்பினர்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பாகவும், நல்லூர் பிரதே சபையின் தற்காலிக உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி...

26 வருட தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில் மரணம்

மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது, மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995...

தொண்டமனாறு கடல்நீரேரியில் குளித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்!!

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. 5 நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே...

ஹப்புத்தளை விமான விபத்து ; காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு நியமனம்!

விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப் படைப் பேச்சாளர் கெப்டன்...

ஒற்றையாட்சியை பாதுகாப்பேன்! பௌத்தத்தை பாதுகாப்போம்! அரசியலமைப்பில் மாற்றம்! ஜனாதிபதி

எங்கள் நாட்டின் அரசியலமைப்பின் படி எனது ஆட்சிக் காலத்தில் ஒற்றையாட்சி அரசு பாதுகாக்கப்படும். அவை பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளர்க்கின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் மதத்தை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இன்று நாடாளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடன உரையை ஆற்றும்போது இதனை தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றம் அவசியமென்றும் இதன்போது குறிப்பிட்டார். அவர்...
Loading posts...

All posts loaded

No more posts