யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (ஜனவரி 3) வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிகக்கு பொறுப்பேற்றார். மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார். பதவி...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய 2ம் கட்ட அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசுடனான ஒப்பந்த்த்துற்கு நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலகயத்மினை இந்திய அரசு அபிவிருத்தி செய்து விமான சேவைகள. ஆரம்பிக்கவிருந்த சூழலில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தடைப்பட்டு பின்னர் இலங்கை அரசின் 2.26 பில்லியன் ரூபா நிதியில் முதல்கட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு 2019-10-17...
Ad Widget

வலிகாமம் கல்வி வலயத்தில் அதிகார துஸ்பிரயோகம்!!

வடமாகாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தில் சில அதிபர்களினதும் அதிகாரிகளினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் முகமான இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் தவறுவிடும் கல்விப்புல அதிகாரிகள் - தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நடைமுறையையும் மற்றவர்களுக்கு வேறுநடைமுறையுமாக பாரபட்சத்தைக்காட்டி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக - வலிகாமம் கல்வி வலய அதிபர் ஒருவரினால் பாடசாலையின்...

காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு : அமைச்சரவையில் தீர்மானம்

காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நிர்வாக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று 02.01.2020 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்...

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் – வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற பொது அமைப்புக்களின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வவுனியா மக்கள் இன்று எனக்கு வழங்கிய வரவேற்பை பாரக்கின்ற போது எனது மனம் கனத்துவிட்டது. பாரிய பொறுப்பொன்று...

டக்ளஸைக் கைது செய்!! யாழில் போராட்டம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது கட்சி அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட வேண்டும் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்”, “ஆட்கடத்தல்காரன் டக்ளஸ் அரச ஒட்டுக்குழு”, “தமிழரை அழிப்பதில் அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டது...

இலங்கையில் மூடப்படும் 2 இந்திய வங்கிகள்!!

இரண்டு இந்திய வங்கிகள் இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே இலங்கையில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன. இந்த இரண்டு வங்கிகளும் தமது நிதி நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்கு, இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. தாய் வங்கிகளிடம் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டது....

வடக்கு ஆளுநர் பிஎஸ்எம் சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. மதத் தலைவர்களின் ஆசிகளைத் தொடர்ந்து தனது செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்....

புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கியவர் மோதிரத்தை அபகரித்துகொண்டு ஓட்டம்!!

புது வருடத்துக்கு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிய நபர் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்துச் சென்ற சம்பவம் நேற்று காலை சுண்டுக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டு புதுவருட தினமான நேற்று ஒருவருக்கு ஒருவர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியில் கொண்டாடினர். வழமைபோல குறித்த நபர் சுண்டுக்குளி பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். இவர்...

புத்தாண்டில் எடுக்கும் உறுதிமொழியை ஏனைய 364 நாள்களிலும் அரச ஊழியர்கள் பின்பற்றுவதில்லை!!

“அரச உத்தியோகத்தர்கள் இன்று (01-01-2019) எடுத்துக்கொண்ட உறுதிமொழி வழமையாக இடம்பெறும் ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாக இருந்து விடக்கூடாதென்பதே எனது எதிர்பார்ப்பாகும். பல வருடங்களாக ஜனவரி 01ஆம் திகதி நாம் இத்தகையதொரு உறுதிமொழியை எடுத்துக்கொள்கின்ற மரபினை கொண்டிருக்கின்றோம். என்றாலும் எஞ்சிய 364 நாள்களும் பெரும்பாலும் நாம் இந்த உறுதிமொழியிலிருந்து விலகியிருப்பதுதான் அரச சேவையை மக்கள் மதிக்காதிருப்பதற்கு காரணமாகும்”...

யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக அதிவேகப் நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி - கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின்...

இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் – பிரதமர்

இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமர் முதலில் கதிர்காம புனிதத் தலத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது புனிதத் தலத்தின் அபிவிருத்திக்கான சகல பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என பிரதமர் கூறியுள்ளார்....

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது வவுனியா காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது...

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம். அவர்கள் பிரச்சனையை சரியாக அணுகவில்லை. இவ்வாறு மீன்பிடி மற்றும்...

புத்தாண்டு தினத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களில் அதிரடி மாற்றம்

அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினமான இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பயணத்தின் முதல் கிலோ மீட்டருக்கான அடிப்படை விலை 60 முதல் 50 ரூபாயாக குறைக்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாவது கிலோ மீட்டரிலிருந்து அடுத்த கிலோ...

யாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பு!!

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இக்குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய முனையமொன்றை அமைக்கும்...

கொழும்பில் மீண்டும் காற்று மாசு – மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது காற்றின் தரம் 158 சுட்டியாக உயர்வடைந்து மாசடைந்து காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தூதரகத்தில் அமைந்துள்ள வளிமண்டலத்திலுள்ள வளியின் தூய்மை குறித்து ஆராயும் நிலையம் இது தொடர்பாக அறிவித்துள்ளது. இதேவேளை புத்தாண்டை...

‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்?’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்!

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப் பெண்ணொருவர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் (30) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. கரைச்சி பிரதேசசபைக்கு முன்பாக உள்ள காணி தொடர்பான...

பல்கலைகழகத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத்தொடரமுடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படும் என்று தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம் உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதற்கமைவாக அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளம் பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதற்குத்...

இன்று முதல் இரத்தாகவுள்ள வரிகள்!!

வருமானம் பெறும் போது செலுத்த வேண்டியிருந்த வரி மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி ஆகியன இன்று (01) முதல் இரத்து செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் மேல் வருமானம் பெறும் நபருக்கு வரி செலுத்த வேண்டியேற்றபட்டதுடன் அந்த வரியை இனிமேல் செலுத்த வேண்டியதில்லை என அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது....
Loading posts...

All posts loaded

No more posts