- Thursday
- May 7th, 2026
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்ததாவது: சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் கடந்த சனிக்கிழமை இரவு அகற்றப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கேட்கப்பட்டதற்கு அமைய யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரின் ஏற்பாட்டில் இந்த சுத்திகரிப்புப் பணிகள்...
யாழ்.மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என இளைஞர் ஒருவர் கோரியதாக கூறி இராணுவத்தினர் இளைஞனை மிரட்டியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது, சுழிபுரம் பாணாவெட்டி பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும்...
தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று 19ம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில்...
எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரெயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரெயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரெயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து ரெயில்வே நிலையங்களுக்கு அருகிலும் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரெயில் - பஸ் கூட்டு சேவை...
மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் மற்றும் கதவு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றனரென முறைப்பாட்டில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிய அதிநவீன MRI (Magnetic Resonance Imaging) Scan machine) வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண அரச வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக இன்மையால் கொழும்பு, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்றே சிரமத்தின் மத்தியில் MRI scan படங்களை நோயார்கள் எடுத்துக்கொண்டனர். அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதிக பணத்தை செலுத்த வேண்டியிருந்தது. தற்போது...
நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (17) அன்று மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் யாழ். மாவட்டச் சமுர்த்தித் திணைக்களப் பணிப்பாளர் க.மகேஸ்வரன்...
யாழ்ப்பாணம், கொட்டடியில் இருவர் மீது வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஆறு பேரில் மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் நீதிமன்றின் உத்தரவில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நின்ற இருவர் மீது நேற்று முன்தினம் இரவு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3...
கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசத இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன்களைப் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கடன் திட்டம் முழுமையாக...
பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001ஆம் ஆண்டு பொங்கு தமிழ் நடத்தப்பட்டது. இதன்போது, தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த...
யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளருடை கார் வாள்வெட்டு குழு ரவுடிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுற்றது. கோப்பாய் சமுர்த்தி வங்கி முகாமையாளருடைய கல்வியங்காட்டில் உள்ள வீட்டு கதவை உடைத்து உட்புகுந்த உட்புகுந்த குழு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து கொழுத்தியுள்ளது. அதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள்...
“உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகின்றது. உங்கள் தாடி முகத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. உங்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். வவுனியாவில் ஒரு கூட்டத்திற்கு வருவதாக இருந்தது. அப்போது சந்திக்க எதிர்பார்த்தேன். ஆனால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. ஆகவே நீங்கள் வருவதாக அறிந்ததும் நான் அவசர அவசரமாக இங்கு வந்தேன்” என இரஜினி தெரிவித்தார்....
வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளநிலையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது. வடக்கு மாகாணத்தில் கடந்த அரசால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்டு...
மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இன்று இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று சுமந்திரன் கோரிக்கை விடுக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கு நாங்கள் காரணமல்ல. திறமையற்ற தலைமையை இதற்கு காரணம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கொழும்பில் படித்துக்கொண்டிருந்த...
தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய்...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினரால் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரைக் கைது செய்யும் நோக்குடன் குறித்த பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணி தொடக்கம் இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. நேற்று தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார். வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை...
தென்னிந்திய நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அரசியல் ரீதியான பயணங்களுக்கு அவருக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் கூறியதாக...
புதுக்குடியிருப்பு- வேணாவில் பாடசாலை அதிபா் இடமாற்றம் செய்யப்படவேண்டும். எனக்கோாி பெற்றோா் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். பாடசாலையின் அதிபா் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், குறித்த பாடசாலையின் அதிபா், பெற்றோர்களிடம் சாதியம் பேசுவதுடன், இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும். அத்துடன் பாடசாலை மாணவர்களின்...
குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இதற்கான பொருத்தமான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி 20 க்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் நோக்கம், மிகவும் வறிய...
Loading posts...
All posts loaded
No more posts
