Ad Widget

பனைசார் உற்பத்தி பொருட்கள் “Online” மூலம் சந்தைப்படுத்தப்பட வேண்டும்! – அங்கஜன்

நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (17) அன்று மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் யாழ். மாவட்டச் சமுர்த்தித் திணைக்களப் பணிப்பாளர் க.மகேஸ்வரன் அவர்களும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தின் போது பனைசார் உற்பத்தி பொருட்களையும் பனையின் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கபப்படும் உற்பத்தி பொருட்களும் பார்வையிடப்பட்டது.

இவ் விஜயத்தின் போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாண முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் போதியளவு சந்தை வாய்ப்பு அற்ற தன்மை காணப்படுவதாகம் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி ,இராஜங்க அமைச்சர் தாரக பாலசூரிய கூறியது போன்று “ஒரு அமைச்சர் தன்னுடைய அமைச்சின் கீழ் உள்ள வேலைகளை மட்டும் முதலுரிமைபடுத்தி செய்யாமல் தனது அமைச்சால பகிரக்கூடிய வேலைத்திட்டங்களையும் செய்யவேண்டும்” அவ்வாறு செய்தாலே உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். எனவும் பனைசார் உற்பத்தி பொருட்கள் Online மூலம்சந்தைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts