Ad Widget

தரம் 6 இற்கான அனுமதிக்கு யாழ் இந்துக்கல்லுாரி மாணவர் பட்டியலை வெளியிட்டது

2019 இல் நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிக்கமைவாக யாழ் இந்துக்கல்லுாரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வியமைச்சு பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது இதனடிப்படையில் அதிபரினால் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்க்கடிதத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பத்தினை கல்லுாரியின் இணையத்தளமான www.jhc.lk இலோ நேரடியாகவோ பெற்று பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை வருகின்ற 13.1.2019 இற்கு முன்பதாக கல்லுாரி அலுவலகத்தில் சமர்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

அனுமதிக்குரிய பதிவுகளுக்கு  வரும்போது

  • முன்னைய பாடசாலை மாணவர் விடுகைப்பத்திரம்
  • பிறப்புச்சான்றிதழ் பிரதிகள் -2 (மாவட்ட செயலகத்தில் பெறப்பட்ட மூலப்பிரதி)
  • புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்று அறிக்கை
  • வசதிகள் சேவைகள் கட்டணம் 300 ரூபா
  • பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்துவ பணம் 600 ரூபா
  • கழுத்துப்பட்டிக்கட்டணம் 200 ரூபா ,காலுறை கட்டணம் 180 ரூபா
  • புலமைப்பரிசிலுக்கு தகுதியானவர்கள் அதற்குரிய பூரணப்படுத்திய  இரண்டு  B படிவங்கள்

ஆகியவற்றை கொண்டுவருமாறு கோரப்பட்டுள்ளது

அத்துடன் மாணவர்கள் அனுமதிக்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

  • 196-171   புள்ளி கொண்டவர்கள் 20.1.2020 காலை 8.30 – பிற்பகல் 1 மணிவரை
  • 170-163  புள்ளி கொண்டவர்கள் 21.1.2020 காலை 8.30 – பிற்பகல் 1 மணிவரை
  • 162-156   புள்ளி கொண்டவர்கள் 22.1.2020 காலை 8.30 – பிற்பகல் 1 மணிவரை

பதிவுகளுக்கு வரும்போது மாணவர்களை அழைத்து வரவேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆங்கிலம் மூலம் கற்க விரும்பும் மாணவர்கள் அதற்கான பரீட்சைக்கு 20.1.2020 காலை 9 மணிக்கு தோற்ற வேண்டியது கட்டாயமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வகுப்புக்கள் 27.1.2020 இல் ஆரம்பமாகும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்

மொத்தமாக  1280 ரூபா மட்டுமே புதிய மாணவர்களிடம் அனுமதியின்போது கட்டணங்களாக அறவிடப்படுவதாக அந்தக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் மாணவர்கள் இணைக்கும் போது பெருமளவில் நன்கொடைப்பணம் அறவிடப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடங்களில் நிதி கையாடல்களுடன்  நடைபெற்ற முறைகேடான அனுமதி நடவடிக்கைகளுக்காக  பழைய மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகள் மற்றும்  அதனைத்தொடர்ந்தான அதிபர் மாற்றத்தின் பின்னணியில் புதிய அதிபர் திரு இ.செந்தில்மாறன் வெளிப்படையான செயற்பாடுகளை மாணவர் நலன்சார்ந்து   மேற்கொண்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தவித முறைகேடான அனுமதிக்கும் இடமளிக்காத வகையில் அனுமதி செயற்பாடுகள் அமையும் என அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதிவு தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவித்தல்

???? 6 ?????? – 20202019??? ????? ???????? ???? 5 ?????????????? ??????????? ???????????? ??????????? ???????????????…

Posted by Jaffna Hindu College on Wednesday, January 8, 2020

 

 

 

 

Related Posts