- Tuesday
- May 5th, 2026
யாழில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி மீளவும் பரிசோதனை செயப்பட உள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6...
நாட்டில் கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வங்கிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். கோரோனாவுக்கு பிந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு வங்கித் துறையை பங்குதாரராக்கிக் கொள்ளுதல் மற்றும் அதன்போது வங்கித் துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (14)...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது. அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு...
யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை அன்றைய தினம் காலையில் நாட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்று ஆரம்பமாகிய நிலையில்,...
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களிலும் வழமைபோன்று இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் எதிர்வரும்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் தெரிவித்துள்ளனர். குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்கப்படும் ஆலோசணைகளுக்கு அமைய கொரோனாவை...
யாழ்ப்பாணம், கலாசாலை வீதியில் தற்காலியமாக இயங்கிவந்த திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறுதினம் முதல் ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுச் சந்தைகளைத் திறப்பதில் அச்சம் காணப்பட்டமையினால், யாழ்ப்பாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மக்கள்...
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமானோர் ஒன்றுக்கூடியிருந்தனர். அத்துடன், சமூக இடைவெளியை மறந்து மக்கள் செயற்பட்டுள்ளனர் எனவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு...
கைதான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை ராஜித சேனாரத்தன சி.ஐ.டி.யில் ஆஜரான...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன்...
நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் , சுன்னாகம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த தே. நடேசு (வயது- 44) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில்...
மதுபான சாலைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது. நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம் திகதிக்குப் பின்னர் மதுபான சாலைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும் அன்றைய...
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “இந்த...
கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சியினரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தான் வெளியிட்ட கருத்து தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்....
குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும்...
யாழ்.மாவட்டத்தில் இப்போதும் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயத்திற்குள்ளேயே இருக்கின்றது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் நோய் தொற்றுக்குள்ளவர்கள் எமது மாவட்டத்திற்குள் நுழைய வாய்ப்புக்கள் உள்ளது. மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது. மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவுச் சுடரேற்றுவதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்தனர். எனினும் சுமார் 30 நிமிடங்களின் பின் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த நினைவுச் சுடரை ஏற்றுவதற்காக வந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரனை விமர்சித்து யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் உருவச் சிலைக்கருகில் உருவப் பொம்மை ஒன்று வைக்கப்பட்டது. எனினும், இதை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார் தமது ஜீப்பில் எடுத்துச் சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சிங்கள...
Loading posts...
All posts loaded
No more posts
