காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

மூடப்பட்டிருக்கும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்தனர். தேசிய வருமானத்திற்கு பங்களிக்க கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ´செழிப்பு பார்வை கொள்கை...

இணையத்தில் வரும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் – அரசு அறிவுரை

கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு நன்மை பயக்கும் என்று கூறி, உள்நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களுடன் இணையத்தில் புழக்கத்தில் இருக்கும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சுதேச வைத்திய ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது. இதுதொடர்பில் சுதேச வைத்திய மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள...
Ad Widget

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து...

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருதனார்மடம்...

மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 39ஆக உயர்வு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எட்டுப் பேருக்கு...

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – மாவை

இலங்கைத் தமிழ் மீனவர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது, முன்னாள்...

யாழ்ப்பாணத்தை ஏன் முடக்கவில்லை?: அரச அதிபர் விளக்கம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் கானப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 1144 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்தாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதய நிலை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விசேட பொறிமுறை – அங்கஜன்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையொன்றை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் அரசியல், சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகள் என்றால்...

கொரோனா அச்சுறுத்தல்: உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு

உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே கொரோனா நோயில் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், அவர் உரும்பிராய் பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

பி.சி.ஆர்.சோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் தடை செய்யப்படும்

கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிச்செய்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துக்களை தடைச் செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார். வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டலுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன்...

உடுவில் பிரதேசத்தின் தனிமைப்படுத்தல் நீக்கம்

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டு குறித்த பிரதேசம் விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனினும் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களது குடும்பத்தையும் அவர்களுடன் தொடர்புடையோரையும் வீடுகளில்...

வட்டுக்கோட்டையில் பெண் உயிரிழப்பு- குருதி மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக் காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அராலி கிழக்கைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான மதுசன் பிரபாகினி (வயது 29) என்பவரே...

அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமை மிகவும் அவசியம் – சுரேன் ராகவன்

அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமை மிகவும் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பௌத்தர்களின் அமோக ஆதரவினைப் பெற்று, ஆழமான சிங்கள தேசியத்துவத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல்...

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும் நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன், தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில்...

யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்படவில்லை: மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற செய்திகளில் உண்மையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். குறித்த செய்தி தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உடுவில் பிரதேசத்தில் மாத்திரமே தற்காலிக நடமாட்டத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக...

நல்லூரில் 39 பேரிடம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனை

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் 39 பேரிடம் இன்று எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன இந்த...

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு சாரதியை தாக்கிய விசமிகள்

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு அதன் சாரதியை தாக்கிய சம்பவம் ஒன்று வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா நகர தரிப்பிடத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய நபர் ஒருவர் பல இடங்களுக்கு சென்றதுடன், மேலும் ஒரு நபரையும் அழைத்துக்கொண்டு பூந்தோட்டம் அகத்தியர்...

ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்துள்ளார். முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை...

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் – அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (10.12.2020) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின்...

கிளிநொச்சியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 25 பேர் கட்டுப்பாடுகளை மீறல் – அனைவரையும் மாங்குளம் வைத்தியசாலைக்கு மாற்றியது சுகாதாரத் துறை

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதாரப்...
Loading posts...

All posts loaded

No more posts