- Thursday
- May 15th, 2025

"சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின்நிலையம் ஜனவரி மாதம் இயக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட சில இடங்களிற்கு மின்விநியோகம் தடைப்படும்" என்று யாழ் பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் புதிதான அமைக்கப்பட ஐஸ் கட்டித் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (more…)

வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் (more…)

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆட்சியைக்குறிவைக்கும் அரசியல் கூட்டமைப்புக்கள் உள்ளன .அவை நிரந்தரமானவையல்ல.தமது நலன்களை அடிப்படையாக வைத்து ஆட்சியில் பங்கெடுக்கவோ அல்லது தமது அரசியல் எதிர்காலத்தை வளப்படுத்தவே முயற்சித்து வருகின்றன. அந்தவகையில் தமிழ் தேசயிக்கூட்டமைப்பும் விதிவிலக்கல்ல. கொள்கைப்பிடிப்புள்ள முற்றிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய கட்சிஅமைப்பு கட்டியமைக்கப்படவேண்டும் என்பதே இன்று பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. (more…)

முச்சக்கரவண்டியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இணுவில் சந்தியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.இந்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன.இன்னும் ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால் குடாநாட்டில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் என விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார். (more…)

இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான இறுதி "கட்டவுட்' புள்ளி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இதனால் பிரதேச செயலகங்களில் வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை காட்சிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு யாழ். பல்கலை மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து ஜனவரி மாதம் முதல் குடாநாட்டுக்குப் புதிதாக 24 மெகா வாற்ஸ் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.வெள்ளிக்கிழமை (இன்று), இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் வியாழக்கிழமை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியே மர்மனான முறையில் மரணமடைந்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்... (more…)

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று யாழில் அனுஷ;டிக்கப்பட்டது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. (more…)

மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்திற்கொண்டு 2 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனினால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. (more…)

கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் வழக்கு விசாரணைகளை 2013 ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை (more…)

அமைச்சர் ஒருவரைக் கொலை செய்யத்திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட யாழ்ப்பாணம் சேர்ந்த பெண்ணொருவருக்கு கேகாலை நீதிமன்றம் 20 வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண்ணுக்கே கிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது (more…)

கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விடுதலைச்செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிப்பதற்காக தடுத்து வைக்கப்படவுள்ளதால், (more…)

யாழ்ப்பாணம் முகாமையாளர் சம்மேளனத்தின் 100ஆவது கலந்துரையாடல் நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.ஆரம்பத்தில் வங்கித்துறையினரைக் கொண்டு நடத்தப்பட்ட முகாமையாளர் சம்மேளனக் கலந்துரையாடல் பின்னர் படிப்படியாக பொறியியலாளர்கள், (more…)

அங்காடி வியாபாரிகளுக்கான புதிய கடைகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.யாழ். மாநகர சபையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். (more…)

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று புதன் கிழமை மட்டும் 6 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக ‘த டிப்ளொமெட்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர். (more…)

All posts loaded
No more posts