Ad Widget

யாழில் சில இடங்களில் மின்தடை

“சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின்நிலையம் ஜனவரி மாதம் இயக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட சில இடங்களிற்கு மின்விநியோகம் தடைப்படும்” என்று யாழ் பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மந்திகை, கிராமக்கோடு, தம்பசிட்டி, ஓராம் கட்டை சந்தி, சாரையடி, புலோலி, பருத்தித்துறை நகரப் பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, சுன்னாகம், இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம், பிரதான வீதி, குருநகர், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம், பட்டணப்பகுதி, யாழ்.மாநகர சபை பகுதி, உரும்பிராய், கோண்டாவில், சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், குப்பிளான், மயிலங்காடு, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை மின்விநியோகம் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தற்போது க.பொ.த (சா.த) பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இந்த மின்தடையானது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகுந்த அசௌகரியத்தை கொடுக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்.

இதற்காக மிகவும் மனம்வருந்துவதுடன் உங்களது பரிபூரண ஒத்துழைப்பையும் இலங்கை மின்சார சபைக்கு வழங்கவேண்டும்” என்றும் அவர் கேட்டுள்ளார்.

Related Posts