தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாண சபையினை கைப்பற்றியது!

வடமாகாணசபை தேர்தல் 2013 இல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாணசபையினை கைப்பற்றி விட்டது.முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அடுத்த சிலதினங்களில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக வாக்குகளை பெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூடிய ஆசனங்களை பெற்றுள்ளது. இதுவரை முழுமையாக பெறுபேறுகள் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி முல்லைத்தீவில் அங்கு உள்ள 5 ஆசனங்களில் 4 இனையும்...

வவுனியா மாவட்டமும் மன்னார் மாவட்டம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வசமாகியது 11 ஆசனங்களில் 7 இனை கைப்பற்றியது

வவுனியா மாவட்டமும் மன்னார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வசமாகியது 11 ஆசனங்களில் 7 இனை கைப்பற்றியது. வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 2 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும். மன்னாரில் 5 ஆசனங்களில் 3 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 1 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 1 இனை முஸ்லிம் காங்கிரசும் பெற்றுக்கொண்டிருக்கின்றன....
Ad Widget

முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி! 9 இல் 7 ஆசனங்கள் கைப்பற்றிவிட்டது!

கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மற்றும் வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி பதிவாகிய வாக்குகள் 68600, அளிக்கப்பட்ட வாக்குகள் 50194, செல்லுபடியான வாக்குகள் 45459, நிராகரிப்பு 4735, த.தே,கூ பெற்ற வாக்குகள் 37079, ஐ.ம.சு.மு 7897, ஐ.தே.க...

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்கள் படுதோல்வியில்அரசுக்கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள 10 தொகுதிகளாகிய மானிப்பாய் ,வட்டுக்கோட்டை,உடுப்பிட்டி காங்கேசன்துறை,ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்,நல்லூர்,சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகியவற்றில் அவற்றினை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது..யாழ் மாவட்டத்தில் இந்த 10 தொகுதிகளுக்காகவும் 16 ஆசனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 ஆசனங்கைள கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டது.அரசின் இணைப்பு கட்சியான ஈ.பி.டி.பி யின் கோட்டையான ஊர்காவற்துறை தொகுதியினை மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிகொண்டிருப்பது முக்கிய விடயமாக...

வாக்குப்பெட்டியில் வேட்பாளரின் ஸ்ரிக்கர்!

நடந்து முடிந்த வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுகொண்டிருக்கின்ற நிலையில் வாக்குப்பெட்டியொன்றை சுற்றி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் விருப்பு இலக்கம் மற்றும் கட்சி சின்னத்துடன் கூடிய ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்

வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!-எண்ணும் பணிகள் ஆரம்பம்

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மூன்று மாகாணங்களிலும்...

சாவக்கச்சேரியில் தாக்குதல்; ஒருவர் காயம்

சாவக்கச்சேரியில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடக்கில் வாக்கெடுப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில். என்றுமில்லாத வகையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக குடாநாட்டு மக்கள் மிக உற்சாகமாக வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.வன்முறைகள் பெரியளவில் எதுவும் இதுவரை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம் முறை வாக்களிக்கும் நிலையங்களில் மக்கள் பெருமளவு கூடியுள்ளமை அவதானிக்க முடிந்தது. நிறைய வாக்காளர்களுக்கு இது தான் முதல் தேர்தலாக இருக்கிறது....

போலிப்பதிப்பு குறித்து மக்கள் குழப்பம் கொள்ள வேண்டாம்!- உதயன் நிர்வாகம்

உரிமையா சலுகையா, வரலாற்று முடிவு இன்று தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம். என்ற தலைப்புடனேயே இன்றைய உதயன் நாளிதழ் வெளிவந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.என உதயன் பத்திரிகை நிர்வாகம் அறிவித்திருக்கிறது தேர்தல் தினமான இன்று உதயன் பத்திரிகையின் பிந்திய பதிப்பு என அச்சிடப்பட்டு விசமிகளால்...

அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு: – கபே அமைப்பாளர் அகமட் மனாஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார். (more…)

ஈபிடிபி, இராணுவத்தினர் இணைந்தே என் வீட்டை தாக்கினர் – ஆனந்தி பரபரப்பு பேட்டி! (காணொளி)

ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

ஆனந்தி வீட்டுத் தாக்குதலுடன் எமக்கு தொடர்பில்லை – இராணுவம்

சுழிபுரத்தில் உள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் ஆனந்தி சசிதரனின் வீடு மீதான தாக்குதலுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுக்கும் அவசர அறிவித்தல்…!

பல்கலைக்கழக மாணவர் சமூகம் யாழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ் அறிவித்தலில்.. (more…)

ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!வேட்பாளர்களும் வழிபாட்டில்!

காலையிலேயே சென்று தவறாது வாக்களியுங்கள்; இந்துமா மன்றம் வேண்டுகோள்

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அனைவரும் காலையிலேயே சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)

வன்முறைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்

வடக்கு, வடமேல், மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்வதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் தினைக்களம் அறிமுகப்படுத்தி உள்ளது. (more…)

கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம் ! தேர்தல் கண்காணிப்பாளரும் தாக்கப்பட்டார்!

தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினர் உட்புகுந்து நடாத்திய தாக்குதலில் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

வடக்கு தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை நிறுத்த கபே தீர்மானம்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

தமிழர்களை ஆளவிட்டால் தங்களை விஞ்சி விடுவார்கள் என்று சிங்கள மக்கள் பயப்படுகின்றனர். – விக்கினேஸ்வரன்

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே தழிழர்களை உலகமே இன்று திரும்பி பார்க்கின்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளனர் !உலகில் மிகப்பிரசித்தி பெற்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட மாவீரான பிரபாகரன், தமிழர்களை அடக்கி ஆண்டான் என்றும். பின்னர் அவர் போரில் கொல்லப்பட்டான் என்று தான் உலகம் அறிந்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு நடைபெற்ற...
Loading posts...

All posts loaded

No more posts