துவாரகேஸ்வரனுக்கு அச்சுறுத்தல்

ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளாராக வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. (more…)

ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த நாளை விசேட உரையாற்றுகிறார்!

வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2005 ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6வது தடவையாக...
Ad Widget

யார் அந்த 4 அமைச்சர்கள்.அடுத்த சில தினங்களில்!

அமையவுள்ள வடமாகாணசபை அரசில் முதலமைச்சரால் 4 அமைச்சர்கள் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் இருந்து நியமிக்கப்படுவர்.அந்த நான்கு அமைச்சர்களும் யார் என இப்போதே ஆதரவாளர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.அவற்றுக்கு பொருத்தமானவர்களை நியமிக்கவே்ணடிய தேவை கூட்டமைப்பினருக்கு இருக்கிறது. அவர்கள் முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடிவர்களாகவும் துறைசார்ந்த விற்பன்னர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது.அதேவேளை கூட்டமைப்பில் உள்ள கட்சிகளையும் சமாதானப்படுத்தவேண்டியும் இருக்கும் இது தொடர்பில் முதலே கருத்தொற்றுமை மற்றும்...

வடமாகாண சபையில் 2 சிங்கள உறுப்பினர்கள்! வவுனியா மாவட்டம் வழங்கியது

வவுனியா மாவட்டத்தில் அரசுதரப்பு பெற்ற 2 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஜயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்று 2 சிங்கள மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவில் 16638 வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 41225 வாக்குகளை தமிழரசுக்கட்சியும் பெற்றிருந்தன.வவுனியாவில் அரசுதரப்புக்கு வழங்கப்பட்ட...

போனஸ் இரண்டும் யார் யாருக்கு? ஆர்வத்தில் ஆதரவாளர்கள்!(2ம் இணைப்பு)

வடமகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோகவெற்றியீட்டி 36 ஆசனங்களில் 28 இனை கைப்பற்றி மேலதிகமான 2 போனஸ் ஆசனங்களினையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1988 மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின்இலக்கம் 2 பிரிவு 62 இற்கமைவாக இங்கு கிடைத்துள்ள இந்த 2 போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு வழங்கவேண்டும் என கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணையாளருக்கு சிபார்சு செய்யப்படவேண்டும். இந்த போனஸ் ஆசன...

“என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்” – அங்கஜன்

"என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்" என தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அங்கஜன் அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்னையில் (more…)

கூட்டமைப்புடன் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநரை நியமிக்க வேண்டும்: வாசுதேவ

வட மாகாணத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:- வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

யாழில் ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம்!

இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழ் கூட்டமைப்புக்கு தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பு

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றமைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் உட்பட தமிழக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். (more…)

வட மாகாணசபை அதிகாரங்கள் இறைமையின் நிமித்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

வாக்குறுதிகளை த.தே.கூ நிறைவேற்றினால் வரவேற்போம்: டக்ளஸ்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன் வரவேண்டும். (more…)

தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீ.வி.விக்னேஸ்வரன் ! கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்

தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன்...

கூட்டமைப்பில் தோல்வியடைய உள்ள அரசதரப்பில் வெற்றிபெறவுள்ள வேட்பாளர்கள் யார்? ஆவலில் ஆதரவாளர்கள்!

நடந்து முடிந்த தேர்தலில் ஆசனங்கள் முடிவாகியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கூட்டமைப்பில் தோல்வியடைய உள்ள அரசதரப்பில் வெற்றிபெறவுள்ள வேட்பாளர்கள் யார்? என்ற ஆவலில் ஆதரவாளர்கள் உள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் இதற்கான விடை தெரிந்துவிடும். கூட்டமைப்பு 30 இடங்களையும் அரசு 7 இடங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தினையும் பெற்றிரு்கின்றது. அதே நேரத்தில் அடுத்ததாக...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாண சபையினை கைப்பற்றியது!

வடமாகாணசபை தேர்தல் 2013 இல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றியுடன் வட மாகாணசபையினை கைப்பற்றி விட்டது.முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அடுத்த சிலதினங்களில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக வாக்குகளை பெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூடிய ஆசனங்களை பெற்றுள்ளது. இதுவரை முழுமையாக பெறுபேறுகள் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி முல்லைத்தீவில் அங்கு உள்ள 5 ஆசனங்களில் 4 இனையும்...

வவுனியா மாவட்டமும் மன்னார் மாவட்டம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வசமாகியது 11 ஆசனங்களில் 7 இனை கைப்பற்றியது

வவுனியா மாவட்டமும் மன்னார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வசமாகியது 11 ஆசனங்களில் 7 இனை கைப்பற்றியது. வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 2 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும். மன்னாரில் 5 ஆசனங்களில் 3 இனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 1 இனை ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பும் 1 இனை முஸ்லிம் காங்கிரசும் பெற்றுக்கொண்டிருக்கின்றன....

முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி! 9 இல் 7 ஆசனங்கள் கைப்பற்றிவிட்டது!

கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மற்றும் வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி பதிவாகிய வாக்குகள் 68600, அளிக்கப்பட்ட வாக்குகள் 50194, செல்லுபடியான வாக்குகள் 45459, நிராகரிப்பு 4735, த.தே,கூ பெற்ற வாக்குகள் 37079, ஐ.ம.சு.மு 7897, ஐ.தே.க...

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்கள் படுதோல்வியில்அரசுக்கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள 10 தொகுதிகளாகிய மானிப்பாய் ,வட்டுக்கோட்டை,உடுப்பிட்டி காங்கேசன்துறை,ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்,நல்லூர்,சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகியவற்றில் அவற்றினை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிவிட்டது..யாழ் மாவட்டத்தில் இந்த 10 தொகுதிகளுக்காகவும் 16 ஆசனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு 14 ஆசனங்கைள கூட்டமைப்பு கைப்பற்றிவிட்டது.அரசின் இணைப்பு கட்சியான ஈ.பி.டி.பி யின் கோட்டையான ஊர்காவற்துறை தொகுதியினை மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிகொண்டிருப்பது முக்கிய விடயமாக...

வாக்குப்பெட்டியில் வேட்பாளரின் ஸ்ரிக்கர்!

நடந்து முடிந்த வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுகொண்டிருக்கின்ற நிலையில் வாக்குப்பெட்டியொன்றை சுற்றி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் விருப்பு இலக்கம் மற்றும் கட்சி சின்னத்துடன் கூடிய ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்

வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!-எண்ணும் பணிகள் ஆரம்பம்

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மூன்று மாகாணங்களிலும்...
Loading posts...

All posts loaded

No more posts