குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது அரசு – சிவாஜி காட்டம்

வடக்கிற்கு சிவில் ஆளுநர் ஒருவரையே நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்ததே தவிர சிங்கள ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.ஆகவே அரசு பொய்களைத் திருப்பித் திருப்பிக் கூறியும்,ஏமாற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் குழம்பியகுட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது.என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு வருகை தந்து...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல் ; வங்கி ஊழியர் கைது

புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவனைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட மாணவன் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே குறித்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னைய செய்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல்
Ad Widget

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆள்கள் தாக்கியதில் விவசாய அமைச்சருக்கு காயம்

யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை ஆளுங்கட்சியினருக்கும் , எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை...

இனப்பிரச்சினை தீரும்வரை நாங்கள் எதிர்க்கட்சி: சிவாஜிலிங்கம்

எமது இனப்பிரச்சினை தீரும்வரை நாங்கள் எதிர்க்கட்சிதான். இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் அண்ணன், தம்பி என்ற நிலையில் உள்ளார்கள். ஆனால், அதிகூடிய துன்பத்தை விளைவித்தவரை அகற்றவேண்டும் என்பது இன்றைய நிலைமை' இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும்...

பளையில் அபிவிருத்தி நடவடிக்கைகள்

வடமாகாண சபை உறுப்பினர் அரியரட்ணம் பசுபதியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதேசத்திலுள்ள 8 வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் சுயதொழில் உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைக்கொண்டு அம்மக்கள் சுயதொழில் வாய்ப்பாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டதுடன்,...

இயற்கையின் அற்புத வாண வேடிக்கைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்

இந்த வருடத்தின் மிகப் பெரிய எரிகல் மழை என்று எதிர்பார்க்கப்படும் எரிகல் தோன்றும் நிகழ்வுக்காக உலகெங்கும் வான அவதான ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும். விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து...

அமெரிக்காவில் 6 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரி

அமெரிக்காவின் பென்சிலிவேனியா மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை போலிசார் தேடி வருகின்றனர். பென்சில்வேனியா மாநிலத்தின் மாண்ட்கோமரி பகுதியில் 35 வயதான பிராட்லி வில்லியம் ஸ்டோன் என்பவர் தனது உறவினர்கள் 6 பேரை வெவ்வேறு ஊர்களில் சுட்டுக்கொன்று தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. வேறு மூன்று பேர் காயமடைந்திருக்கின்றனர். அவர் ஆயுதந்தாங்கியிருக்கிறார், ஆபத்தானவர் என்று கூறிய...

சிட்னி கஃபே முற்றுகை முடிந்தது; ஆயுததாரி உட்பட மூவர் பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்தியில் உணவு கஃபே ஒன்றில் ஆயுததாரி ஒருவர் பணயக் கைதிகளாக மக்களை பிடித்து வைத்திருந்த சம்பவம் பொலிஸாரின் அதிரடி தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஆட்களைப் பிடித்து வைத்திருந்த ஆயுததாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன. 49 வயதான இரானிய அகதியான இந்த ஆயுததாரியின் பெயர் மான் ஹரோன்...

தெல்லிப்பழை, உடுவில் பிரதேசங்களை அனர்த்த பிரதேசங்களாக அறிவிக்க கோரிக்கை!

சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்களுடன் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று திங்கள் கிழமை முற்பகல் வலி....

சிட்னி ஹோட்டலிலிருந்து மேலும் 2 பிணையாளிகள் தப்பி வந்தனர்.. இதுவரை 5 பேர் வெளியேறினர்!

சிட்னி காபி ஹோட்டலில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் தப்பி வந்துள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேர் வெளியேறியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 5 பேர் மீண்டு வந்துள்ளனர். சிட்னி லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலை சிறை பிடித்துள்ளான் ஒரு தீவிரவாதி. கடந்த 7 மணி நேரமாக இந்த சிறைபிடிப்பு நீடிக்கிறது. ஹோட்டலுக்கு வெளியே...

ஐந்து சந்தியில் குழு மோதல், மூவர் படுகாயம்

யாழ். ஐந்து சந்திப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற குழு மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் மூன்று சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தீக்கிரையாக்கப்பட்ட கடையில் ஏற்பட்ட தகராறு குழு மோதலாக மாறியதாகவும் பொலிஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து,...

சிட்னி சம்பவத்துக்கு ஜனாதிபதி கண்டனம்

அவுஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் 13 பேரை தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜஸபக்ஷ கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தனக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல் பரப்புரைக்கு சிறைக் கைதிகளை பயன்படுத்தும் ஆளும் கட்சி – கபே

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைக்காக சிறைக் கைதிகளை பயன்படுத்தப்படுவதாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்து சிறை கைதிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபே விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல்

அரச புலனாய்வு பிரிவுனர் என அடையாளம் காட்டிக்கொண்ட நால்வரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு 1௦.௦௦ மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாம் ஊரெழு இராணுவமுகாமை சேர்ந்த அரச புலனாய்வு பிரிவினர் எனக் கூறி யாழ், பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்த இவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக...

ஓட்டுத்தொழிற்சாலையை மீள இயக்க நடவடிக்கை!

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை அடுத்த ஆண்டு முற்பகுதியிலிருந்து புதுப் பொலிவுடன் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை...

காங்கேசன்துறை – அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் மழை?

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (15) இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மன்னார் காங்கேசன்துறை வரையான மாத்தறை திருகோணமலை பொத்துவில் மட்டக்களப்பு அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் இடி காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவம் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான கடலோரங்களில்...

தமிழர்களின் தீர்வுக்கு இணக்கமும் கூட்டு முயற்சியும் வேண்டும் – ஈ.பி.டி.பி

இணக்கமும் கூட்டுமுயற்சியும் இருந்தால் தான் எமது இனத்துக்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன், சனிக்கிழமை (13) தெரிவித்தார். ஊர்காவற்றுறை தொகுதிக்கான இளைஞர் மற்றும் மாதர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டிருப்பதாலும்...

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

ஏ– 9 வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற விபத்தில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். டபிள்யு.ஏ.பியந்த (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்தவராவார். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின், நீதிமன்றத்துக்கான கடமைகளை செய்யும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ஞாயிற்றுக்கிழமை காலை...

8 வயது சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்.நுணாவில் மத்தி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் பெற்றோர் சனிக்கிழமை (13) காலை சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில், மாலை...

வவுனியாவில் 33 பேர் சாட்சியமளிப்பு!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது அழைக்கப்பட்டவர்களில் 33 பேர் சாட்சியமளித்தனர். நேற்றய தினம் சாட்சியமளிப்பதற்காக 52 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் 33 பேரே சாட்சியமளித்தனர். நேற்றய சாட்சியங்களில் அதிகளவானவை இராணுவத்திற்கு எதிராகவே பதிவாகின. செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் இருந்து 10 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts