Ad Widget

பத்திரிகை பயங்கரவாதம் நடக்கின்றது – அன்டனி ஜெகநாதன்

பத்திரிகைகள் பக்கச் சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. உண்மையான செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு காசு கொடுக்க வேண்டுமா? என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வடமாகாண சபை அமர்வில் தான் கூறிய கருத்தொன்றுக்கு...

வவுனியா மாவட்டத்தை வடமாகாண சபை புறக்கணிக்கின்றது- தியாகராசா

வடமாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் கவனிப்புக்களில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளிலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி வடமாகாண சபை செயற்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.தியாகராசா கோரிக்கை முன்வைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, மழை...
Ad Widget

இந்தியாவில் மேலும் பத்து அணுமின் நிலையங்கள் – மோடி

இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைவிட கூடுதலாக பத்து அணுமின் நிலையங்கள் தொடங்கப்படும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் வெற்றிப்பெறுள்ளதாகவும் அதனையடுத்தே இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாகவும் இந்தியா வந்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்புக்கு பிறகு இந்தியப் பிரதமர் இதை கூறியுள்ளார். இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளின்...

நாவலர் விழா!

யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...

காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

அரசியல் யாப்புக்கு முரணான விதத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போகும் வர்த்தமானி அறிவித்தலை (1882/6 இலக்கம் - 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி) ரத்து செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது,...

ஜனாதிபதியின் விஜயத்தால் யாழ். பாடசாலைகளுக்கு ரூ. 8.87 மில்லியன் செலவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் உள்ளக வீதி திருத்தல் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதி திருத்தல், வர்ணம் பூசுதல் ஆகியவற்றுக்காக 8.87 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11)...

ரஜினிக்கு தன் ‘ஸ்டைலில்’ வாழ்த்திய நடிகர் கமல்!

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாளையொட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சமூக வலைதளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் ரஜினி நடித்த லிங்கா திரைப்படமும் வெளியாவதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்....

திசைகாட்டி நிறுவுநர் மீது வாள் வெட்டு

மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத மூவர் கொண்ட குழு வாளினால் வெட்டியதில் திசைகாட்டி நிறுவனத்தின் நிர்வாகி எஸ்.சுபசீலன் (வயது 42) படுகாய மடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த...

‘சுதந்திர பயணம்’ வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்பட்ட பிரகடனம்

2014 டிசம்பர் 10ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் 'சுதந்திர பயணம்' வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்பட்ட பிரகடனம். முன்னுரை இலங்கை 1948இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததோடு இனமுரண்பாடு தோற்றம் பெற்றது எனலாம். இதன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த தலைவர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் மற்றும் அவர்களின் கொள்கைகள் காரணமாக தொடர்ந்த இன...

தமிழர்களை முழு அளவில் வாக்களிக்க வலியுறுத்துகின்றது தமிழ்க் கூட்டமைப்பு

வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

ரணிலை எம்முடன் இணைக்க ஒரு கோப்பை தேநீர் போதும் -மகிந்த

"சில அம்மையார்கள் வந்து எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அத்துடன் எமக்கு எதிராக ஆணைக்குழு அமைத்து விசாரிக்கப்போகிறார்களாம். ஆணைக்குழுவை அமையுங்கள். நாங்கள் பயப்படவில்லை. எனது கையில் இரத்தம் தோயவில்லை. எனது கையில் அழுக்குப் படியவில்லை. அவ்வாறு இரத்தம் தோய்ந்தும் அழுக்குப் படிந்தும் இருந்தால் எனது கைகளை நானே வெட்டிவிடுவேன்." - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த...

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் – தவராசா

நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லையென்றால் அதற்காக போராடுவதற்கு தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வியாழக்கிழமை (11) தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, நெல்சிப் திட்டத்தில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில், அதற்கு...

தேர்தல் விதிமுறைகளை மீறினார் வடக்கு ஆளுநர்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் வட மாகாண ஆளுநரால் ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அரச துறைகளில் வேலை வாய்ப்புக்களோ, அரச உதவிகளோ, இடமாற்றங்களோ வழங்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல். இந்தநிலையில் ஆளுநர் செயலகத்தில் பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த 92 அரச...

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது கடந்த அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கியெறிந்து சபையின்...

அத்துருகிரியவில் விமான விபத்து: நான்கு பேர் பலி

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த சில நிமிடங்களிலேயே விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. அனைத் தொடர்தே விமானம் விபத்துக்குள்ளானது....

மிஸ்கினின் பிசாசு டிசம்பர் 19-ல் ரிலீஸ்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இதில் நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ரேவ் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரோல் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தவர்கள் அனைவரும் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து...

சினிமாவிற்கு குட் பாய் சொன்ன அனுஷ்கா! சோகத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு இணையாக ஒவ்வொரு படத்திலும் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பவர் அனுஷ்கா. இவரை பற்றி சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று ரசிகர்களை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடிப்பில் இன்று லிங்கா, விரைவில் என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்கள் வரவிருக்கின்றது. இப்படங்கள் ரிலிஸ்க்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில்...

ஜனாதிபதி தேர்தலில் விசித்திர சின்னங்கள்

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என...

மருத்துவ கல்விக்கு அனுமதி மறுத்த இந்தியா, அனுமதி வழங்கிய சீனா!!

இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடைவிதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி மருத்துவ கல்விக்கு தெரிவானார். இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்றுப்...
Loading posts...

All posts loaded

No more posts