- Wednesday
- May 20th, 2026
அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜெனிவா பிரேரணை சம்பந்தமான விவாதத்தை தான் புறக்கணிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றைய தினம் தனக்கிருந்த தனிப்பட்ட காரணமொன்றிற்காக அந்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரனையில் பயங்கரமான விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ படத்திற்கு பிறகு இந்த வருடத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படம் முடிவடைந்தும், பல்வேறு காரணங்களால் வெளியாக முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில், அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியராக...
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு:- * 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். அரிய நிகழ்வுகளில் ஒன்றான இத்தகைய அளப்பரிய சாதனையை இதற்கு முன்பும் தென்ஆப்பிரிக்கா...
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 3 வீரர்களின் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றதுடன் தொடரையும் சொந்தமாக்கி வரலாறு படைத்தது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ‘இது பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் அதிகமாக ‘பவுன்ஸ்’ செய்ய முடியவில்லை. சுழலுக்கும் கைகொடுக்கவில்லை. வான்கடே...
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகையில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகைசெய்து பராமரிக்கும் பொது அமைப்புகளுக்கு, பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வழங்கப்படும் உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர்பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சனசமூக நிலையங்கள், மாதர் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற...
நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன் படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு,...
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு - பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம்...
முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வயதெல்லையை 25 ஆக மட்டுப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில், தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை முன்வைத்த யோசனைக்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனூடாக எதிர்பார்த்த பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியாது என சங்கத்தின் செயலாளர் ரி.ஆர்.ஆர்.பள்ளி எமது செய்திச் சேவைக்குத்...
மேலதிகாரிகள் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வருகிறது. இதனடிப்படையில் அப்படை முகாமின் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் பணியாற்றிய கே.ஜெயதிலக (வயது 21) என்ற சிப்பாய் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு...
ஒரே பாடசாலையில் ஏழு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு அவர்களது நியாயமான காரணங்களைக் கருத்தில் எடுக்காது இடமாற்றம் என்னும் பெயரில் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் சாவடைவதும், ஓய்வுபெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படவும் நேர்கிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-...
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர் திருத்த அமைச்சர் திலக் மாரப்பன்ன தெரிவித்தார். அதற்கு மாறாக அவர்களது பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 100 மில்லி மீற்றர் மழை பெய்கக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரே...
எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் (Unity Mission trust) எற்பாட்டில் புதிய இலங்கையினை உருவாக்கும்...
நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி, வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டாhர். கடந்த 22ஆம் திகதி...
அஜித்தின் உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அஜித் நடித்து வரும் படங்கள், படங்களின் பெயர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுபவர் சுரேஷ் சந்திரா. இவருடைய ட்விட்டர் தளத்தை SCREENSHOT எடுத்து போட்டோ ஷாப் மூலமாக மாற்றி "அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்" என்று மாற்றி வாட்ஸ்-அப்...
பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பின் விசத்தை முறியடிக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்ததுடன் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்...
வடமாகாண நட்டலமொத்தன் குளத்தில் நடந்த 51 பாடசாலை பெண் பிள்ளைகள் சாவிற்கும் மூதூரில் பிரஞ்சு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த 17 ஊழியர்கள் கொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. உடலகம ஆணைக்குழு 2005 ஓகஸ்டிற்கும் நவம்பர் 2006 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற 16 மனித உரிமை...
கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்றுக் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார். மாளிகையின் உள்ளே நுழைவதற்கு இரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே...
Loading posts...
All posts loaded
No more posts
