சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – பாராளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில்...

அரியாலை பகுதியில் பெண் தற்கொலை

அரியாலை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Widget

யாழ். – கிளி. ஒருங்கிணைப்பு குழு தலைவராக விஜயகலா நியமனம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இவரது தலைமையிலேயே இடம்பெறவுள்ளது....

4 பசுக்கள் நசுங்கிப் பலி

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஓட்டு மடம் பகுதியினூடாக பேருந்து சேவையிலீடுபடும் போக்குவரத்து வீதியில் நேற்று காலை சுமார் பத்திற்கு மேற்பட்ட மாடுகள்...

மண்டைதீவிலும் மனித புதைகுழி : அகழ்வுக்கு உட்படுத்துமாறு சபையில் சிறிதரன் எம்.பி வலியுறுத்து

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர்,...

முஸ்லீம் லீக் யாழ். மாவட்டக் கிளை தெரிவு

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக ஐ.எஸ்.நிராஸ், செயலாளராக என்.எம்.றிஸ்வி, பொருளாலராக எம்.மகனாஸ், பிரதித் தலைவராக எம்.எஸ்.ஜாபிர், பிரதி செயலாளராக எம்.றிஸ்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் அமைந்துள்ள காரியாலத்தில் நடைபெற்ற...

கடற்படை பஸ் மோதி மாணவி பலி

வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கடற்படையினரின் பஸ் மோதி, மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். பஸ் சாரதி, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக...

வைத்திய அதிகாரிகள் சங்கப் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

நாடு தழுவிய ரீதியில் வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை முதல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் கீழ் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த போராட்டத்தை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்கின்றமைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்வதற்கு...

சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது...

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை பாடுபடும்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை தொடர்ந்தும் பாடுபடும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொடிய யுத்தம் விட்டுச்சென்ற வடுக்களில் மிகமோசமானது பலருக்கு வலுவிழப்பை ஏற்படுத்தியமையாகும். துப்பாக்கி பிரயோகம், எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்,...

வடமாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு முறைப்பாடு

நிதிப் பிரமாணக் கோவைகளிற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிதி கையாளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரினால் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Joule Power மற்றும் Beta Power ஆகிய நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபை பளை பிரதேசத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி...

இலங்கை அகதி தற்கொலை முயற்சி

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை முகாமில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய 20 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது...

உப தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க போட்டி

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலுக்காக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதார். இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 24ம் திகதி...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு தாமதமின்றி பொதுமன்னிப்பு வழங்குக! – சம்பந்தன்

"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதில் சட்டப்பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினையே உள்ளது. எனவே, இதை நீடித்துக்கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டோம்'' என்று நாடாளுமன்றில் உறுதியாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள்...

மீண்டும் போர் ஏற்படாத வகையில் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்! – ஜனாதிபதி

"இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நட்புறவையும் கட்டியெழுப்புவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் அரசு அர்ப்பணிப்புடன் தெற்கையும் இன, மொழி,மதம் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதிக்குரிய முழு அதிகாரங்களையும் நாடாமன்றத்துக்கு வழங்கி சட்டவாக்கச் சபையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...

வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது: நடிகர்-நடிகைகள் மாடிகளில் தஞ்சம்

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை. கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்...

2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுநிலை வலு இழக்கிறது : அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் அடுத்தடுத்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள...

நான் எனது மக்களை உண்மையாகவே நேசிக்கிறேன் – கமல்ஹாசன்

வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் கூறினார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:- மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு...

கைத்தொலைபேசிக்காக மாணவர்களை அடியாட்களாக்கிய அதிபர்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் (இலக்கம் 2) அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை கடுமையாகத் தாக்கி விசாரணைக்கு உட்படுத்தியதில் தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஐம்பதாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை என தெரிவித்து சந்தேகம் என்ற...

யாழிலும் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு

இலங்கை தேசிய அரசாங்கத்தின் 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தேசியளவில் மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்.மாவட்ட வைத்தியர்களும் இணைந்துள்ளனர். தேசிய வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களுக்கான தீர்வையற்ற வாகன கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தேசிய மட்டத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே...
Loading posts...

All posts loaded

No more posts