Ad Widget

முஸ்லீம் லீக் யாழ். மாவட்டக் கிளை தெரிவு

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராக ஐ.எஸ்.நிராஸ், செயலாளராக என்.எம்.றிஸ்வி, பொருளாலராக எம்.மகனாஸ், பிரதித் தலைவராக எம்.எஸ்.ஜாபிர், பிரதி செயலாளராக எம்.றிஸ்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் அமைந்துள்ள காரியாலத்தில் நடைபெற்ற வைபவத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

1936ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான அரசியல் சமூக மாற்றங்களும், முஸ்லீம் லீக்கின் ஆரம்பமும், தற்போதய நிலையிலும் எதிர்காலத்தில் யாழ். முஸ்லீம்களுக்கான கல்வி, சமூக சேவைகளுக்கான தேவைப்பாடுகள் குறித்த புதிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு ஓய்வுநிலை ஆசிரியர் எ.எச்.மஹ்ரூப் விளக்கவுரையாற்றினார்.

Related Posts