- Wednesday
- June 10th, 2026
தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 40 கிலோகிராம் நிறையுடைய பொருட்களை மாத்திரமே விமானத்தின்...
வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், இயற்கையின் சீற்றங்கள் புதியன அல்ல. பூமியில் வாழ்கின்ற உயிரினங்கள் பூமியில்...
ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : “முகையதீன் வக்குசு உடைய...
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள், 37 அரை சதங்களுடன் 7214 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 333 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவர் தனது முதுகுப் பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்....
புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம்...
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்திருந்த நிலையிலேயே எனது கணவன் படையினரிடம் சரணடைந்தார். என்னைப்போல் பலர் தங்கள் கணவனை, பிள்ளையை ஒப்படைத்தார்கள். இப்போ அவர்கள் காணாமல்போய் விட்டார்கள் என கூறுவதை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. என்று விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிந்தனின் மனைவி சாட்சியம் அளித்தார். காணாமல்போனவர்களை...
வெள்ளை வானில் வந்த இரணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றபோது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். எனினும் அங்கிருந்த இராணுவத்தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர் என தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் நாள்...
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைபோல் பாவித்தனர். அதேபோல்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்...
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்டவர்களுக்கான அமர்வு சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற போது, ஆணைக்குழுவின் விசாரணையின் முடிவில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரின் உறவினர்கள்...
கொழும்பில் இன்று அதிகாலை ஒன்றரை மணிநேரத்தில் 114.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி உதயநனகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி (76) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அருகில் உள்ள கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு...
இலங்கையில் வெறுப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டத்திருத்த முன்வரைவுகளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்த சட்டத்திருத்தத்தை கடும்போக்கு பௌத்தவாத அமைப்பான பொதுபல சேனா எதிர்த்துள்ளது. அதேபோல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், அரசாங்கம் அந்த சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும்...
விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரு. இவர் மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. ‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்குப் பிறகு விக்ரம் சிறந்த கதையை தேடிவந்த...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தற்போது இந்த ஜோடி புதிய படம் மூலம் இணையவுள்ளது. ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’...
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் மேம்போக்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும் மாகாண சபைகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார். வடமாகாண சபையின் 41ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையில்...
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜெயவர்த்தன ராஜ்குமார் என்ற 10ஆவது சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மாணவியின் கொலை வழக்கு, விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10ஆவது சந்தேகநபரும் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார், மரணச் சடங்கில் கலந்துகொண்டார் மற்றும்...
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராவார். இவரை...
ஐபிஎல் டி20 தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே, ராஜ்கோட் அணிகளுக்கான முதல் கட்ட வீரர்கள் தேர்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முதல் வாய்ப்பு புனே அணிக்கு வழங்கப்பட்டது. இதன்படி முதல் ஆளாக டோனியை ரூ.12.5 கோடிக்கு புனே அணி வாங்கியது. அஜிங்யா ரகானேவை புனே அணி வாங்கியது. மேலும் ராஜ்கோட் அணி சுரேஷ் ரெய்னா மற்றும்...
ஆண்ட்ராய்டு போனை வாங்கும் பலர் அதில் இருக்கும் பல செய்திகளையும், பயன்பாடுகளையும் சரியாக அறிந்து கொள்வதில்லை. போனை வாங்கியவுடன் அதை பற்றிய செய்திகளையும் படித்து பயன் அடைய வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் போனுக்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ள முடியும். உங்களுக்கே தெரியாமல் பல விஷயங்கள் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு போனை பற்றி...
Loading posts...
All posts loaded
No more posts
