. மோடி இலங்கை விஜயம் – Jaffna Journal

யாழ். வந்த மோடிக்கு மக்களின் வரவேற்பு போதாது – தவராசா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில்... Read more »

இந்திய பிரதமருக்கு பரிசுப்பொருள் வழங்கக்கூட எங்களை அனுமதிக்கவில்லை – முதல்வர் சி.வி

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு... Read more »

தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டுமென என்று பிரதமர் வலியுறுத்தினார் – மனோ

‘தமிழர் ஒற்றுமை’ (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும் என்று இந்தியப்பிரதமர்... Read more »

முதலமைச்சர், ஆளுநரின் வாகனங்களும் சோதனை

வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே யாழ். பொதுநூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் மேற்கொண்டு யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, இந்திய நிதியுதவியில் முற்றவெளியில்... Read more »

மோடி – மஹிந்த சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பேசியதாக அறியமுடிகிறது. பாரதப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40இற்கும்... Read more »

நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் – யாழில் மோடி

இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயம் கொண்ட இந்திய... Read more »

வடக்கு முதல்வரை சந்தித்தார் இந்தியப் பிரதமர்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். Read more »

ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (14) பிற்பகல் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு தலைமன்னார்- மடுவுக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார். கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக... Read more »

அனுராதபுரத்தில் மோடி வழிபாடு

இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனுராதபுரத்திற்கு சென்றார். காலை அங்கு விஜயம் செய்த அவர், ஸ்ரீமாஹா போதி, றுவன்வெலிசாய ஆகிய பகுதிகளுக்கு சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்... Read more »

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப்... Read more »

13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும் ரூபாவின் பெறுமதியை பலப்படுத்தவும் உதவி

இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு... Read more »

மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார். Read more »

 இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது... Read more »

ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தைடைந்த இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இனறு காலை இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்டவை... Read more »

நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்த​டைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரால் இந்திய பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். Read more »