- Thursday
- August 20th, 2026
ரஷ்யா மீது கைவைத்தால், பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் முன்னாள் சுவிஸ் தூதரான Yves Rossier உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதும் தவறு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். ரஷ்யாவை காயப்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக...
லிசிசான்ஸ்க் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, உக்ரைனில் தாக்குதலை தொடர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். "முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி" தங்கள் நோக்கங்களைத் தொடர மற்ற முனைகளில் உள்ள படைகளுக்கு புடின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுஹான்ஸ்க் பகுதி முழுவதும் இப்போது ரஷ்ய கைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிராந்தியத்தின்...
கிழக்கு மாகாணமான லுஹான்ஸ்கில் உக்ரைனின் கடைசி கோட்டையான லிசிசான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. எனினும், இதனை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்த முக்கிய நகரத்தில் சண்டை இப்போது சிறிது காலமாக மிகவும் தீவிரமாக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களின் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க முயல்வதால், உக்ரேனில் போர்...
பின்லாந்தில் வருங்காலத்தில் அமைய இருக்கும் நேட்டோவின் இராணுவம் தளம் ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள Lappeenranta பகுதியில் அமைய வேண்டும் என பின்லாந்து பரிந்துரைத்துள்ளது. [caption id="attachment_113989" align="aligncenter" width="774"] Corporal Lalabalavu from the Royal Welsh Regiment stands in front of his squad after exiting from a Warrior...
திடீரென ஒருநாள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையில் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார் என முன்னாள் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த உளவாளியான Daniel Hoffman, புடினுடைய ஆலோசகர்கள் உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதால், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவரை அகற்றுவதற்காக இரகசிய திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களை புடின் கண்டுபிடித்துக் கொல்வதற்கு...
2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஐ பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மாட்ரிட்டில் நேட்டோ மாநாட்டில் பேசிய பிரதமர், "எதிர்கால போர் காற்று போன்ற முக்கிய திறன்களில் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் எனவும், மிகவும் ஆபத்தான மற்றும் அதிக போட்டி நிறைந்த...
பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழ்ப்போவதில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், புடின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் லொறியில் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், லொறியிலிருந்து...
குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில்...
ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை - ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் இலங்கை - ரஷ்ய நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடைபெற்றது....
உக்ரைனும் மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் மற்றும் மால்டோவாவை இக்கூட்டமைப்பில் சேர்வதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இது ஒரு வரலாற்று தருணம் எனவும், "ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல நாள்" என்று ட்வீட் செய்துள்ளார். "உங்கள் நாடுகள் எங்கள் ஐரோப்பிய...
உக்ரைனில் சண்டையிட்டதற்காக ரஷ்ய ஆதரவு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தால் பிரித்தானியாவை சேர்ந்த ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோருக்கு மரண தண்டனை...
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் போராளிகள் மட்டும் அதன் படையில் 55 வீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்டை நாடான லுஹான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் கவனம் செலுத்தி, லைசிசான்ஸ்க் நகரைச் சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டதாக உக்ரேனியத்...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தமையை காணொளிகள் காட்டும் அதேவேளை மீட்பு நடவடிக்கையும் தொடர்கின்றன. தொலைதூர பகுதிகளில், இருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதேவேளை...
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ரஷ்யா முழுமையாக வெளியேறும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவை தங்கள் எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக உக்ரைனுக்கு...
சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு கச்சா எண்ணெயை தள்ளுபடியில் விற்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடான சவுதி அரேபியாவை விட, ரஷ்யாவின்...
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்ய படை வீரர்கள் தொடர்ச்சியாக தாக்குதலை தீவிரப்படுத்தித வருகின்றனர். இந்நிலையில், மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல்...
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பிரித்தானியாவில் அகதிகளாக குடியேறிய உக்ரைன் நாட்டவர்கள் பலர் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பலருக்கு தங்குமிடம் கிடைக்காததால் அல்லது அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்து போனதால், வீடற்றவர்களாகவோ அல்லது வீடற்ற நிலைக்கு ஆளாகவோ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் மொத்தம் 660 உக்ரேனிய குடும்பங்கள்...
உக்ரைனில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்கள் சிரியாவுக்குக் கொண்டு சென்றதாக செயற்கைக்கோள் பட நிறுவனமான Maxar அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் என்ற இடத்தில் இரண்டு ரஷ்யக் கொடியிடப்பட்ட கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்பட்டிருப்பதை படங்கள் காட்டுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பிறகு, சிரியாவில்...
உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோர் உக்ரைனில் சண்டையிட்டபோது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இந்த தகவலட உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல்...
Loading posts...
All posts loaded
No more posts
