Ad Widget

வெற்றியை கொண்டாடும் உக்ரைன் இராணுவம்!!

உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய வெற்றிகளைக் குறிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளது.

அதில், துருப்புக்கள் சண்டையிடுவதையும், குடியிருப்பாளர்கள் தங்கள் விடுதலையாளர்களை மீண்டும் வரவேற்பதையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போரா் சுமார் ஆறு மாதங்கள் வரையில் நீடித்துள்ள நிலையில், வடமேற்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளது.

இது போரின் திருப்புமுனையாகவே கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக் கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின.

இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகள் இசியம் பகுதியை தங்களின் தாக்குதலுக்கான லாஜிஸ்டிக் தளமாக பயன்படுத்தினர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் அங்கிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts