- Monday
- September 14th, 2026
இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இந்த போட்டி தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய 22 வயதான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவ்ஷல் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு...
தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா...
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா புஜராவின் சதத்தால் 312 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி...
ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது. சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு...
இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்கா பிரசாத்துக்கும் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இஷாந்த் ஷர்மா பெவிலியன் திரும்பியபோது, பிரசாத் அவரின் பின்னால் ஓடிச்சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியாவின் கடைசி விக்கெட்டுக்கு அஸ்வினுடன் ஜோடி சேர்ந்தார் இஷாந்த் ஷர்மா. 76வது...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமார் சங்கக்கார இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இன்று...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 20ம் திகதி கொழும்பு...
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். எனவே இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. அதில் மெத்திவ்ஸ் 64 ஓட்டங்களையும் சந்திமால் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்வின் 6 விக்கெட்களையும் மிஸ்ரா 2...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 183 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் நேற்று காலி சர்வதேச விளையாட்டரங்களில் ஆரம்பமாகிய முதலாவது போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பாரிய நெருக்கடியை கொடுத்துள்ளனர். காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் மதியபோசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்...
இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா பங்குபற்றி விளையாடவுள்ள அவரது இறுதி போட்டியை பார்வையிடுவதற்கு தென்மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் இந்தியாவுக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே இவ்வாறு இலவச டிக்கெட் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை கிரிக்கெட் வீரர்கள், ஆண்...
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்துகொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை...
வடமாகாணத்திற்கான சம்பியன்சிப் உதைபந்தாட்ட போட்டி இன்று வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தால் தினச்செய்தியின் அனுசரைணையுடன் இடம்பெறுகின்றது. இந்த உதைபந்தாட்ட போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக, H.M.G.S பளியெக்கார (ஆளுனர் வடமாகாணம்) அனுர டீ.சில்வா (இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்) திரு.K.T.ராஜசிங்கம் (தினச்செய்தி ஆசிரியர்) A.நடராஜா (இந்திய துணைத்தூதுவர்)மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த (யாழ் மாவட்ட கட்டளைத்...
ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3வது வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு...
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிபதி லோதா இந்த அதிரடி...
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் சமநிலையில் இருந்த இரு அணிகளும், கடந்த மூன்றாம் திகதி மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில்...
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜமொன்றினை மேற்கொண்டுள்ளனர். இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தலைமையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தக்குழுவில் செயலாளர் பாலேந்திரா உப தலைவர்களான பிரிகேடியர் ஹாரியவசம் நளின் றொபேட் பீரிஸ் மற்றும் உதைப்பந்தாட்டப் மத்தியஸ்தர் சங்க இணைப்பாளர் யாப்பா மற்றும்...
மன்னாரில் முதற் தடவையாக ஒலிம்பிக் தின நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மாலை நான்கு மணியளவில் மன்னர் தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இருந்து வைபவரீதியாக ஆரம்பமாகியது. மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலைகளின் மாணவ மாணவிகள் ஒலிம்பிக் தீபத்தையும் அதனை தொடந்து ஒலிம்பிக் சின்னம் மற்றும் கொடியை ஏந்தியவாறு நடைபவனியாக சென்றனர். மன்னார் பிரதான பாலத்திலிருந்து...
இம்முறை வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா 2016வை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 8 போட்டிகளை யாழ் விளையாட்டு கட்டிடத் தொகுதியிலும் மேலும் 14 போட்டிகளை கிளிநொச்சி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலும் நடத்தப்படவுள்ளன. ஹொக்கி, ஜிம்னாஸ்டிக், மற்றும் கரையோர கரப்பந்து போட்டிகள் யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வௌியே நடத்த...
Loading posts...
All posts loaded
No more posts
