- Monday
- September 14th, 2026
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சில நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின் தேர்வாளர்கள் சிலருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென முறைப்பாடுகள் முன்வைக்கப்படடன....
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து, முன்னாள் வீரர்களுக்கான டி20 தொடர் நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகமெங்கும் புகழ் பெற்றுள்ளது. ஆனால், முன்னாள் வீரர்களுக்கு இதில் இடம் கிடைப்பதில்லை. அவர்களை ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்து கை கழுவி விடுகின்றன ஐபிஎல் நிர்வாகங்கள். இதனால்...
இளவாலை சிறுவிளானைச் சேர்ந்த அப்புக்குட்டி இராஜேந்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு புதிய சாதனைகளை படைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்க இவர் திருமணம் ஆகிய போதிலும் தனது விளையாட்டுத் துறையின் பால் உள்ள ஆர்வத்தைக் கைவிடாத நிலையில் காணப்படடார். இந் நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர்...
சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்காக நான்காவது ஆண்டாக நடைபெற்ற பெரும் துடுப்பாட்டப் போட்டியில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி ஒரு இனிங்ஸ் மற்றும் 82 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையேயான இரண்டு நாள் போட்டியாக நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான போட்டி யாரும் எதிர்பாரா வண்ணம்...
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி - கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை (24) நாளை சனிக்கிழமை (25) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது. இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி...
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது. நேற்று லண்டனில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே நிதி நிறுத்தப்பட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு கலைந்தது. இந்நிலையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்ட்டது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் இன்று காலமானார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டியில் 2000 ரன் எடுத்து, 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் இவராவார். ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா 28...
ராவணனை போல இந்திய அணி கேப்டன் டோணி அழியப்போகிறார் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் சிங் சாபமிட்டு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. அவரை அணியில் சேர்க்காமல் இருக்க டோணி தூண்டுதல் காரணம் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேட்டியளித்து...
இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் தொடங்கி மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளன....
இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அவர், அனுப்பிவைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் பொறுப்பேற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரிக்கி பொன்டிங் விளையாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் டுவெண்டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பயிற்றுவிப்பு துறையில் கால் பதித்துள்ளார்....
எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம்:– முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் வீரர் கெய்ஸ் 215 ஓட்டங்களைக் குவித்தார். இதில் குறைந்த பந்தில் இரட்டை சதம் எடுத்து...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு தலைவராக சிதத் வெத்தமுனி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செயலாளராக பிரகாஷ் ஷாப்டர், பொருளாளராக லுசில் விஜேவர்தன, துணைத் தலைவராக குஷில் குணசேகர, கபில விஜேகுணவர்தன ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிகாலம் நிறைவுபெறுவதால் குறித்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தக்...
11வது உலக கோப்பை தொடர் நேற்றுடன் இனிதே நிறைவுபெற்றது. ஆஸ்திரேலியா, 5வது முறையாக சாம்பியனாகிவிட்டது. இந்த உலக கோப்பையில் பரிசு தொகை மதிப்பு மொத்தம் 71 கோடியாகும். 2011 உலக கோப்பை பரிசு தொகையைவிட 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதில், சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 3,975,000 பரிசு தொகையாக கிடைத்தது....
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இலவச wi-fi சேவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆண்களுக்கான போட்டியில், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை சம்பியனாகியது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் நடத்திய கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இவ் இறுதிப்போட்டியில்...
நடைபெற்றுவரும் 11ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டியில், தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதல் முறையாக உலக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஓக்லண்ட மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(24) ஆரம்பமான அரையிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா -நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயசுழற்றிசியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் இடையில் மழை குறுக்கிட, 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட...
Matrix Homes அனுசரணையுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் கல்லூரின் 125ம் ஆண்டை முன்னிட்டு நாடாத்தப்படுகின்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று (21-03-2015) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வெகு விமர்சையாக யாழ் இந்துக் கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெண்களுக்கான இராமநான் கல்லூரினை எதிர்த்து திருக்கன்னியர் மட கல்லூரி அணி மோதவுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
