முரளி கிண்ண கிரிக்கெட் நேற்று ஆரம்பம்

வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில்...

கராத்தே போட்டியில் தாயும் மகனும் முதலிடம்

பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினால் (Institute of Martial Arts, Point Pedro), சிகான் பொனி றோபேட் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தேப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாயும் மகனும் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர். இப்போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதி காட்டா போட்டியில் முதலிடத்தையும், 7 வயதுப்...
Ad Widget

ஒடிசா போலீசாருக்கு கவாஸ்கர் கண்டனம்

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2–வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய இந்திய அணி 92 ரன்னில் சுருண்டதால் ரசிகர்கள் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்...

சினிமா ஸ்டார்கள் ஆடலுடன் இந்திய கால்பந்து லீக் இன்று ஆரம்பம்!

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர், சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்குகிறது. வரும் டிசம்பர்...

199 ரன் குவித்தும் இந்தியா தோல்வி: நடுவர்கள் மீது தோனி அதிருப்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 106 ரன்னும், (12 பவுண்டரி, 5...

விரைவில் யாழ்ப்பாணத்தில் மாகாணங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி

“நானும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சதீஸ் அவர்களும் சந்தித்து இவ்வாறு ஒரு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். அது இன்று வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது. ‘தினச்செய்தி’யின் பிரதம ஆசிரியர் திரு.கே.ரீ.இராசசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வடக்கின் வல்லவன் விளையாட்டு விழாவில் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். அப்பொழுது...

“வடக்கின் வல்லவன்” நாவாந்துறை சென் மேரீஸ்

சனிக்கிழமை இரவு மின்னொளியில் இடம்பெற்ற “வடக்கின் வல்லவன் 2015” ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டியில் வடக்கின் வல்லவனுக்கான பட்டத்தை தனதாக்கிக் கொண்டது யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக் கழகம். மின் ஒளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கில்லரி வி.க எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் வி.க மோதியது. மைதானத்தினை சுற்றி நிரம்பிய ரசிகர் கூட்டத்துடன் பிரம்மாண்டமாக...

“வடமாகாண வல்லவன் ”யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா?

அக்கினி இசைக் குழுவின் இசைச் சமருடன் கூடிய மாபெரும் இறுதிப் போட்டி.“வடமாகாண வல்லவன்”; யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா? எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாத சுவாரஷ்யமான போட்டி. “தினச்செய்தி”யின் அனுசரணையில் மாபெரும் பரிசு மழை பொழியும் உதைபந்தாட்டத் தொடராக கருதப்படும் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் “வடமாகாண வல்லவன்” உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி( 26.09.2015) இன்று...

அடுத்தாண்டு முதல் வடமாகாண மட்டத்தில் தாச்சிப் போட்டி அறிமுகம்!

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான தாச்சி விளையாட்டுப் போட்டி அடுத்தாண்டு முதல் வடமாகாண மட்டத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தப்படவுள்ளதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த. குருகுலரசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். அவர்...

ஜப்பானில் 105 வயது இளைஞர் கின்னஸ் சாதனை

ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டபந்தயப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 100 மீ துாரத்தை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானை சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி(105) புதிய கின்னஸ் சாதனை படைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் , கூடுதல் பயிற்சி செய்து, 'மின்னல் மனிதன்' உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே தனது லட்சியம் எனக் கூறினார். முன்னதாக தனது...

தேசிய ரீதியிலான காற்பந்து யாழில் ஆரம்பம்

பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி நேற்று முன்தினம் முதற்தடவையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. கல்வி அமைச்சுடன் இணைந்து இப்போட்டிகளின் ஒழுங்குகளை மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் இசுறுபாய ஆகியன மேற்கொண்டுள்ளன. 15 வயது பிரிவு,17 வயது பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவு ஆண், பெண் ஆகிய நான்கு குழுக்களாக இடம்பெறும் இப்போட்டிகள் யாழ் மாவட்டத்தின்...

தோனி அதிரடி: ஹீரோஸ் லெவன் வெற்றி

சேவை நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்கான டி-20 கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி அதிரடியில் ஹீரோஸ் லெவன் அணி வெற்றி பெற்றது. பிரிட்டன் ராணுவச் சேவை அமைப்பு ஒன்று நோயாளிகள், காயமடைந்தவர்கள், படுகாயமடைந்த பிரிட்டன் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் சர்வதேச பிரபல முன்னாள் மற்றும்...

மஹல, சங்கா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அர்ஜூன ரணதுங்க

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜயவர்தன ஆகியோரை, துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு கடுமையான விமர்சனம்...

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல நியமனம்!

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான துடுப்பாட்ட ஆலோசகராக இவர் செயற்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துபாயில் இடம்பெறவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னாள்...

போட்டி நடுவர் பணியில் இருந்து விலகுகிறார் மகனாமா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் 49 வயதான ரோஷன் மகனாமா கடந்த 2004–ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எலைட் போட்டி நடுவர் (மேட்ச் ரெப்ரி) குழுவில் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 58 டெஸ்ட், 222 ஒரு நாள் போட்டி மற்றும் 35 இருபது 20 ஓவர் போட்டிகளில் போட்டி...

வீட்டுக்குள்ளேயே நிர்வாண போல் நடன கிளப் நடத்தும் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் அல்லது சிக்ஸ் என்றாலே நமக்கு விரைவில் ஞாபகம் வரும் வீரர் வெஸ்ட்இண்டீசின் ஜமைக்கா வீரர் கிறிஸ் கெய்ல்தான். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் இவர் பந்துகளை சிக்சராக பறக்க விடுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். மைதானத்தில் எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுகிறாரோ, அதேபோல் எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனிதரும் இவர்தான். எந்தவொரு நேரத்திலும் தனது...

இலங்கையின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜெயரத்ன

ஜெரோம் ஜெயரத்ன (Jerome Jayaratne) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்த மாவன் அத்தப்பத்து தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். சொந்த மண்ணில் இலங்கை அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் டெஸ்ட் தொடரை இழந்திருந்தமையே...

ஷேன் வொட்சன் ஓய்வு

அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வுபெறுவதற்கான சரியான தருணம் இதுவே என அவர் அறிவித்துள்ளார். உபாதைகளால் தடுமாறிவந்த ஷேன் வொட்சன், அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதிலும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தார். இதன் காரணமாக, ஆஷஸ் தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே விளையாட வாய்ப்புக் கிடைத்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான...

மாவன் அத்தபத்து பதவி விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர், முன்னாள் நட்சத்திர வீரர் மாவன் அத்தபத்து பதவி விலகியுள்ளார். இவரது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகள்

யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் இன்றுடன் (03) ஆரம்பமாகின்றது. இன்று முதலாவது போட்டியாக கரம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ம் மற்றும் 8ம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ் இராணுவ நிதிமன்ற மைதானத்திலும்,உதை பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ம் திகதிகளில்...
Loading posts...

All posts loaded

No more posts