- Monday
- September 14th, 2026
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது உள்ளிட்ட நான்கு விருதுகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனதாக்கிக்கொண்டார். ஆண்டின் சிறந்த ஜனரஞ்சக வீரருக்கான விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார். ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த சகல துறை வீராங்கனையாக முன்னாள் அணித்...
சிவசேனா கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகளின் பேச்சு இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சு டெல்லியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார்கான், தலைமை...
வெஸ்ட் இண்டீஸ்–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேனும், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளருமான சாமுவேல்ஸ் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்...
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி டி காக்கின் சதத்தால் (103) 7 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்....
காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்க்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்கள் பெற்றது. முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும்...
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்கள் பெற்று பலமான நிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பெண் வீரர் ஒருவரும் கலந்து ஆடுகிறார். ஆஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும், இன்று தொடங்கும் இரு நாள் போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டித்தொடரில் வடக்கு மாவட்டங்களுக்கான அணிக்காக, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன்...
"தவறு நடைபெறும் என எதிர்பார்த்து நிறைய பேர் வாளை தயாராக பிடித்து வைத்திருந்தனர்" என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தெரிவித்தார். 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. டோணி பொறுப்பாக ஆடி 92 ரன்களுடன் கடைவரை களத்தில் நின்றதால் இந்தியா 247 ரன்களை எட்ட முடிந்தது....
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 484 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக...
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் வெளியிட்டார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து...
இந்த ஆண்டின் பொதுநலவாயப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் நடைபெற்று வருகின்றன. 64 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 17வயதுக்கு உட்பட்ட பளுதூக்கலில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 227 கிலோ பளுவைத்தூக்கியே விஸ்ணுகாந் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்....
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோணியின் அசத்தலான ஆட்டத்தால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அடுத்ததாக ஐந்து...
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது டெஸ்ட் நேற்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. அந்த அணி சார்பில்...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது. தலைவர் டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ஓட்டங்களையும் டுபெலிசிஸ் 62 ஓட்டங்களையும் எடுத்தனர். உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா தலா இரண்டு...
காரைநகர் பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் 27 ஆவது விளையாட்டவிழா 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சம்மேளனத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப்பணிப்பாளர் த.தபேந்திரன் கலந்துகொண்டார். இந்நிகழ்வு காரைநகர் தியாகராஜா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெறும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் அளவெட்டி அரு ணோதய கல்லூரி மாணவன் என்.நெப் தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். 19 வயதுப் பிரிவினருக்கான கோலூன் றிப் பாய்தல் போட்டியில் இவர் நான்கு மீற்றர் 21...
இந்திய கேப்டன் பதவியில் இருந்து டோணி நீக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அடுத்தடுத்த தொடர் தோல்விகள் மட்டுமின்றி, அணியின் வீரராகவும் சிறப்பான பங்களிப்பை அளிக்க டோணி தவறி வருவதால் டோணி மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இந்தியா...
கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து...
2015ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றி கிண்ணத்திற்கான யாழ். மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகின்றது.மைலோ வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு நேற்று யாழில் உள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. மைலோ கிண்ணத்திற்கான ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை ஈகிழ்ஸ் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட லீக்குகலான பருத்தித்துறை,...
அமெரிக்காவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மூன்று இருபது-20 காட்சிப் போட்டிகள் கொண்ட தொடருக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்னும் எதிரெதிர் அணிகளுக்கு தலைமை தாங்கவுள்ளனர். கிரிக்கெட் ஓல்-ஸ்டார்ஸ் சீரிஸ் 2015 என இந்தத் தொடர் அழைக்கப்படவுள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் பேஸ்போல் அரங்குகளிலேயே இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி நவம்பர் 7ஆம் திகதி நியூயோர்க் சிட்டி...
Loading posts...
All posts loaded
No more posts
