Ad Widget

வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா

இம்முறை வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா 2016வை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

sports-festival

அதற்கமைய 8 போட்டிகளை யாழ் விளையாட்டு கட்டிடத் தொகுதியிலும் மேலும் 14 போட்டிகளை கிளிநொச்சி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலும் நடத்தப்படவுள்ளன. ஹொக்கி, ஜிம்னாஸ்டிக், மற்றும் கரையோர கரப்பந்து போட்டிகள் யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வௌியே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் நடைபெறும் விளையாட்டு விழாவானது பல இன, மத இளைஞர் யுவதிகளுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் உறவையும் மேம்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தும். அத்துடன் அமைதியின்மை, இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படாமல் தடுக்கவும் இதுவொரு சந்தர்ப்பமாக அமையும்.

இச்சந்தர்ப்பத்தினூடாக வட மாகாணத்தில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts